பொது செய்தி

இந்தியா

உலகில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, மரணத்தில் இந்தியா இரண்டாவது இடம்

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Corona Cases, Death, India, coronavirus, covid 19, கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, இந்தியா, இரண்டாவது, இடம்


புதுடில்லி: உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

உலகத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலக அளவில் இதுவரை 1.17 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 5.4 லட்சம் பேர் உயிரிழந்தள்ளனர், 66.4 லட்சம் பேர் குணடைந்துள்ளனர். உலகிலேயே அதிக பாதிப்பை கொண்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 30.4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 1.32 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். இரண்டாவது, மூன்றாவது இடங்கள் முறையே பிரேசில், இந்தியா உள்ளது.


latest tamil news



கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளில் உலக நாடுகளிலேயே இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 49,458 பேர் பாதிக்கப்பட்டனர். அடுத்தபடியாக இந்தியாவில் 22,510 பேரும், பிரேசிலில் 21,486 பேரும் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், ஒரே நாளில் அதிக இறப்புகளை பதிவு செய்த நாடுகளில் பிரேசில் (656 இறப்பு) முதலிடத்திலும், இந்தியா (474 இறப்பு) இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா (360 இறப்பு) மூன்றாவது இடத்திலும் உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
08-ஜூலை-202018:08:00 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி மஹாராஷ்டிராவும் தமிழகமும் டெல்லியும் சேர்ந்துதான் உலகில் நமக்கு இந்தப் பெருமையை வாங்கிக் கொடுத்துள்ளன.
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
07-ஜூலை-202019:16:45 IST Report Abuse
Raj நம்ம வாய்ச்சொல் வீரரின் மாபெரும் உலக சாதனை
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
07-ஜூலை-202016:01:46 IST Report Abuse
Loganathan Kuttuva மக்கள் தொகையிலும் இந்தியா முன்னிலையில் உள்ளது .இறப்பு விகிதம் குறைவு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X