பொது செய்தி

இந்தியா

பேச்சு, பேட்டி, அறிக்கை...!

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
coronavirus, covid 19, coronavirus lockdown, இன்றைய, பேச்சு, பேட்டி, அறிக்கை

'மத்திய அரசு, மதவாத அரசு இல்லையே; தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தானே, மத்தியில் பதவியில் உள்ளது...' என, கூறத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி நிறைய...

'ஆம். இதில் மட்டும் ஏன், சி.பி.ஐ., விசாரணை வேண்டாம் என்ற, தி.மு.க.,வின் நிலைப்பாடு வினோதமானது தான்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேட்டி அளித்துள்ளார். அவரது பேட்டி:

எதற்கெடுத்தாலும், 'தமிழக அரசு மீது நம்பிக்கை இல்லை; சி.பி.ஐ., விசாரணை தான் தேவை' என, தி.மு.க., இதுவரை கூறி வந்துள்ளது. ஆனால், சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக, தமிழக அரசு, சி.பி.ஐ., விசாரணை என அறிவித்ததும், 'அது தேவையில்லை' என, தி.மு.க., கூறுவது வேடிக்கையாக உள்ளது.

'இங்கே எதிர்க்கட்சித் தலைவர்கள், வெளிநாட்டுப் படிப்பெல்லாம் படிக்கிறாங்க... அது, அடுத்த நாட்டுக்கு ஆதரவா பேசத் தான் கற்றுக் கொடுக்குது போலிருக்கு...' எனக் கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ராகவன் அறிக்கை:


latest tamil news




எந்தவொரு நாட்டின் ராணுவத்தின் செயலையும், சொந்த நாட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் கிண்டல் செய்ய மாட்டார்கள். ஆனால், அந்த கீழ்த்தரமான செயல், நம் நாட்டில் தான் நடந்து வருகிறது.

'இதெல்லாம் ரொம்ப ஓவர். இதன் மூலம், தமிழக அரசின் கஜானாவை காலி செய்ய நினைக்கிறீர்களா அல்லது மக்களை சோம்பேறியாக்க விரும்புகிறீர்களா என்பது தெரியவில்லை...' என, காட்டமாக கண்டிக்கத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் அறிக்கை:

கொரோனா நோய் பெருந்தொற்று, பல மாதங்கள் நீடிக்கும் என, தெரிகிறது. இதை கருத்தில் கொண்டு, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை, தமிழகத்தில், விலையில்லா உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும்.

'இதே கோரிக்கையை நீண்ட காலமாக, உங்கள் கட்சி கோரி வருகிறது; அரசுகள் தான் கண்டு கொள்ள மாட்டேன் என்கின்றன...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், புதிய தமிழகம் கட்சி பிரமுகர் ஷியாம் கிருஷ்ணசாமி அறிக்கை:

எத்தனை காலத்திற்கு தான் தலித், எஸ்.சி., என்று கூறுவீர்கள். உழவு மட்டுமே தொழிலாக கொண்ட தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு, இது என்றென்றும் கறை தான்; இதை நீக்க வேண்டும். தேவேந்திர குல வேளாளர் என்று மட்டும் தான் அழைக்க வேண்டும்.

'மத்திய அரசு, மதவாத அரசு இல்லையே; தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தானே, மத்தியில் பதவியில் உள்ளது...' என, கூறத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:

மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, தனக்கு எதிராக கருத்துகளை முன்வைக்கும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்த நினைக்கிறது. மத்திய அரசின் மதவாத அடிப்படைவாதிகளின் செயல்பாடுகள் வன்மையான கண்டனத்திற்குரியவை.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aanandh - thamizhnaadu,இந்தியா
07-ஜூலை-202011:27:01 IST Report Abuse
Aanandh இந்தத் தொகுப்பு ஒரே குழப்பம். சற்று தெளிவான முறையில் முன்பு போல் வெளியிடலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X