கொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது: கர்நாடகா அமைச்சர்

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement

துமாகூர்: கொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது கவலை அளிக்கிறது என கர்நாடக அமைச்சர் மதுசாமி தெரிவித்துள்ளார்.


latest tamil newsகர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மொத்தம் 25,317 பேர் பாதிக்கப்பட்டுள்ளர். 14,389 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை அங்கு 401 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,843 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தொற்று அதிகரித்து வந்தாலும் முதல்வர் எடியூரப்பா, துணை முதல்வர் அஸ்வத் நாராயண், அமைச்சர் சுதாகர் உள்ளிட்டோர், கர்நாடகாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக உருவெடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.latest tamil newsஇந்நிலையில், துமாகூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் மதுசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: துமாகூரில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 8 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ் சமூக பரவலாக உருவெடுத்துள்ளதால் நாங்கள் கவலை அடைந்துள்ளோம். அதை கட்டுப்படுத்த முயற்சித்தாலும், மாவட்ட அதிகாரிகளுக்கு அது கடினமான கட்டத்தை எட்டியுள்ளது. எங்கோ நிலைமை கைமீறி சென்றுவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
07-ஜூலை-202020:12:00 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN கொரானோ ஊழல்செய்பவன் திருடன் கொலைக்காரன் கூலிப்படைக்காரன்களை சோதித்தால் நல்லது . இறைவன் அணுக்கிரகம் தேவை. நல்லோர் நலம்பெற.......
Rate this:
Cancel
07-ஜூலை-202014:22:54 IST Report Abuse
நக்கல் இனியும் சமூக பரவல் இல்லை என்று சொல்வது மடமை... அதிக பரிசோதனை செய்ய செய்ய பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் தெரிகிறார்கள்... இதுல ஒரே நல்ல விஷயம் என்னவென்றால் பெருவாரியாக பாதிக்கப்பட்டவர்கள் வைரஸ் நோய் அறிகுறி இல்லாமல் இருக்கிறார்கள்.... கொரோனா வைரஸில் பல வகைகள் (strains) இருக்கின்றன.. உதாரணமாக சீனாவில் இருக்கும் வகை வேற இத்தாலியில் இருப்பது வேற... நம்மை எந்த வகை பாதிக்கிறதோ அதனுடைய தீவிரத்தை வைத்துதான் ஒருவரின் பாதிப்பு தெரிவதும் தெரியாததும் என்று நினைக்கிறேன்... கவலை அளிக்கும் விஷயம், இது வந்து குணமானவரை மீண்டும் தாக்கும் வாய்ப்புள்ளது... எல்லோரும் ஜாக்கிரதையாக, அரசு சொல்வதை கேட்டு நடப்பது வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும், வியாதி உள்ளவர்களுக்கும் நல்லது...
Rate this:
Raj - nellai,இந்தியா
07-ஜூலை-202018:54:01 IST Report Abuse
Rajunmai. but tamil nadu govt wont say the trurh of community spread...
Rate this:
Cancel
svs - yaadum oore,இந்தியா
07-ஜூலை-202012:53:23 IST Report Abuse
svs என்னமோ கேரளா , கர்நாடக , தெலுங்கானா எல்லாம் கட்டுப்படுத்திட்டோம் , சென்னை தமிழ் நாடு மட்டும்தான் பிரச்சனை என்று கூறி கடைசியில் எல்லாம் டுபாக்கர் என்று இப்போதுதான் புரியுது ....கேரளாவில் இந்த அமைச்சர் சேச்சி அம்மா தமிழ் நாட்டுக்காரன் நோய் பரப்புவான் என்று அறிக்கை விடுறாங்க.. அடுத்தவனை குறை சொல்வதை விட்டு அவங்க மாநிலத்தில் அவங்க கட்டுப்படுத்தட்டும் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X