கேரளா தங்க கடத்தல் வழக்கு: முதல்வரின் முதன்மை செயலர் மாற்றம்

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (21) | |
Advertisement
திருவனந்தபுரம்: கடந்த வாரம் தங்க கடத்தலில் சிக்கிய ஊழியரை காப்பாற்ற முயற்சிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகம் மீது குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, முதல்வர் அலுவலகத்தில் இருந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நீக்கப்பட்டுள்ளார்.கடந்த ஜூலை 4ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து விமானம் மூலம் கேரளாவுக்கு 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது. இது தொடர்பாக
Kerala, CM, Secretary, Removed, Pinarayi Vijayans, golfd smuggling, ias officer, கேரளா, முதல்வர், பினராயி விஜயன், முதன்மை, செயலாளர், நீக்கம், தங்கம் கடத்தல், வழக்கு

திருவனந்தபுரம்: கடந்த வாரம் தங்க கடத்தலில் சிக்கிய ஊழியரை காப்பாற்ற முயற்சிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகம் மீது குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, முதல்வர் அலுவலகத்தில் இருந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை 4ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து விமானம் மூலம் கேரளாவுக்கு 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது. இது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், சுங்க அதிகாரிகள், சரக்கு முனையத்தில் கடத்தல் தங்கத்தினை பறிமுதல் செய்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சரக்கு விமானம் ஒன்றின் மூலமாக அந்த பெட்டகம் மூலம் தங்கம், ஐக்கிய அரபு எமீரேட்சில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வந்தடைந்தது. வெளியுறவுத்துறை அனுமதியோடு அந்த பெட்டகத்தை பிரித்து பார்த்த போது, அதில் தங்கம் இருந்தது தெரியவந்தது. துபாயில் இருந்து வந்த அந்த பெட்டகம், ஐக்கிய அரபு எமீரேட்ஸ் தூதரகத்திற்கு அனுப்பப்பட்டது சுங்கத்துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது. வெளியே கொண்டு செல்ல, அதிகாரிகளின் அனுமதிக்காக காத்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக , திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரியுமான (PRO) ஸரித் குமார் நேற்று கைது செய்யப்பட்ட பின்னர் இந்த வழக்கில் 14 நாட்கள் சிறை வைக்கப்பட்டுள்ளார். விமானத்தில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் கேரள அரசியலில் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.


latest tamil news
ஐக்கிய அரபு எமீரேட்ஸ் அரசின் துணை தூதரக முன்னாள் அதிகாரியும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் ஆபரேஷனல் மேஜேனருமான ஸ்வப்னா சுரேஷ் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். தலைமறைவாகியுள்ள அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஸ்வப்னாவை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக, அரசின் முதன்மை செயலாளரும், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளருமான சிவசங்கர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


latest tamil news


இந்த கடத்தல் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா, இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரியிருந்தார். மேலும் முதல்வர் அலுவலகத்தில் ஒரு கிரிமினல் கும்பல் ஒன்று செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டிய அவர், கடத்தல் வழக்கின் விசாரணையில் தலையிட முயன்றதாகக் கூறப்படும் விவகாரம், அதில் ஈடுபட்ட நபர்கள் குறித்து முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.


நீக்கம்

இந்நிலையில், முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து சிவசங்கர் நீக்கப்பட்டுள்ளார். அவர் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளராக நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் முதன்மைச் செயலாளராக மீர் முகமது நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Kirubakaran - Doha,கத்தார்
07-ஜூலை-202021:12:27 IST Report Abuse
G.Kirubakaran காங்கிரஸ் உல் நாட்டில் கொள்ளை அடிக்கிறார்கள். கம்யூனிஸ்ட் வெளி நாட்டில் இருந்து கொள்ளை அடிக்கிறார்கள்
Rate this:
Cancel
Anbu - Kolkata,இந்தியா
07-ஜூலை-202021:09:11 IST Report Abuse
Anbu \\\\ முதல்வர் அலுவலகத்தில் இருந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நீக்கப்பட்டுள்ளார். //// பினராயிக்கான பலி கடா .......
Rate this:
Cancel
Saravanan - Chennai,இந்தியா
07-ஜூலை-202019:22:29 IST Report Abuse
Saravanan சீன commission CPIM க்கு எந்த வழியிலும் வரும் என்பதற்கு இது ஒரு உதாரணம். படிப்பறிவு (மட்டும்) மிக்க கேரளா மக்கள் வாழ்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X