பொது செய்தி

இந்தியா

ஒரு மாதமாக தொடர்ந்து உயர்ந்து வரும் நகர்ப்புற வேலையிழப்பு

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
Urban, Joblessness, Rise, Cities, Urban unemployment, indian states, Covid-19 lockdown, Restrictions, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, நகர்புறம், வேலையிழப்பு, அதிகரிப்பு

மும்பை: கடந்த நான்கு வாரங்களாக நகர்புறங்களில் வேலையிழக்கும் சம்பளதாரர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

ஜூலை 5ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நகர்ப்புறங்களில் வேலையின்மை 11.26 சதவீதமாக உயர்ந்தது. இது முந்தைய வாரத்தில் 10.69 சதவீதமாக இருந்தது. கர்நாடகா, தமிழகம், அசாம், மேற்கு வங்கம் மற்றும் மஹாராஷ்டிரா ஆகியவை கொரோனா பரவலை கட்டுப்படுத்த நகரங்களில் முழு ஊரடங்கினை அமல்படுத்தியதால் வேலையிழந்தோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.


latest tamil news


கொரோனா வைரஸை சமாளிக்க நகரங்கள் திணறுவது, தொழிற்துறை இயங்குவதில் குறைபாடு, குறு, சிறு நிறுவனங்களுக்கு ஊரடங்கு தந்துள்ள அடி, சந்தையில் டிமான்ட் இல்லாமல் இருப்பது ஆகியவை ஒட்டுமொத்த வேலை சூழலை பாதிக்கின்றன என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். முறைசார்ந்த தொழில்துறை வேலைகள் திரும்ப கிடைக்க பல மாதங்கள் ஆகும். சுகாதார பிரச்னைகள், ஆள்பற்றாக்குறை, நஷ்டத்திலிருந்து மீள ஆகும் காலம் போன்ற காரணிகளால் தொழில்துறை நடவடிக்கைகளை தொடங்க முடியவில்லை. ஒவ்வொருவரும் முயற்சி எடுத்தால் தான் நிலைமை மெதுவாக மேம்படும் என கூறுகின்றனர்


latest tamil news


புலம்பெயர் தொழிலாளர்கள் கிராமங்களுக்கு சென்றுவிட்டதால் நிறைய பணிகளுக்கு ஆள்பற்றாக்குறை உள்ளது. அவர்கள் பணிக்கு திரும்ப குறைந்தது ஆறு மாதம் ஆகும் என்கின்றனர். வேலைகளை மீட்டெடுப்பதற்கான முன்னேற்றம் சம்பளத்தாரர்களிடையே பலவீனமாக உள்ளது. ஏப்ரலில் 17.7 மில்லியன் சம்பளதாரர்கள் வேலை இழந்தனர். மே மாதத்தில் இந்த இழப்பு 17.8 மில்லியனாக அதிகரித்தது. ஜூன் மாதத்தில், 3.9 மில்லியன் சம்பள வேலைகள் மீட்கப்பட்டன. ஆனால் இது மிகக் குறைந்த அளவு என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
07-ஜூலை-202021:10:18 IST Report Abuse
Nallavan Nallavan கொரோனா காரணமில்லை ............. இதுக்கும் மோதிதான் காரணம் .................
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
07-ஜூலை-202020:28:36 IST Report Abuse
S. Narayanan விரைவில் சரியாகும். கவலை வேண்டாம்.
Rate this:
Cancel
Layman - Chennai,இந்தியா
07-ஜூலை-202020:01:33 IST Report Abuse
Layman கவலை வேண்டாம் இந்நிலை தாற்காலிகம்தான் ....உலகம் முழுதும் இதே நிலைதான் ...சிறிது காலத்தில் நிலமை மாறும்..நம்பிக்கையுடன் இருங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X