பொது செய்தி

இந்தியா

கொரோனா இறப்பு எண்ணிக்கை; சீனாவை முந்தியது மும்பை

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Corona Cases, Mumbai, China, corona Mumbai, coronavirus deaths, corona cases, maharashtra, corona cases, corona update, coronavirus update, coronavirus count, corona toll, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic கொரோனா, வைரஸ், பாதிப்பு, சீனா, மும்பை, முந்தியது

இந்த செய்தியை கேட்க

மும்பை: இந்தியாவின் வர்த்தக தலைநகராக அறியப்படும் மும்பை, கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையில் வைரஸ் தோன்றிய நாடான சீனாவை முந்தியுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவியது. ஹூபெய் மாகாணத்தில் வேகமெடுத்த இவ்வைரஸ், பின்னர் உலகம் முழுவதும் பரவியது. ஆனால் சீனா வைரஸை கட்டுப்படுத்திவிட்டதாக கூறி வருகிறது. அங்கு தற்போது ஒற்றைபடையில் தான் தொற்று பாதிப்பு பதிவாகிறது. இதன் உண்மை தன்மை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


latest tamil news



இந்த நிலையில் சீனாவின் மொத்த கொரோனா பாதிப்பு 83,565 ஆகவும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,634 ஆகவும், கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் 22-வது இடத்திலும் உள்ளது. இந்த இரண்டு எண்ணிக்கையையும் மும்பை மாநகரம் தற்போது முந்தியுள்ளது. மும்பையில் மட்டும் மொத்த கொரோனா பாதிப்பு செவ்வாய் நிலவரப்படி 85,724 ஆகவும், மொத்த இறப்பு எண்ணிக்கை 4,938 ஆகவும் உள்ளது. சீனாவுடன் ஒப்பிடும் போது மும்பையானது ஜூலை முதல் தேதியிலிருந்து தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை பதிவு செய்கிறது.


latest tamil news



மாநில அளவில் பார்த்தால் மஹாராஷ்டிராவானது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, தென் ஆப்ரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளை விட அதிகம் பாதித்துள்ளது. சமீபத்திய புள்ளிவிவரப்படி 9,026 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 2.11 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 87,681 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
07-ஜூலை-202019:40:36 IST Report Abuse
konanki தவறான செய்தி.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
07-ஜூலை-202017:44:58 IST Report Abuse
Chandramoulli சீனா உண்மையை சொல்லவில்லை . கேரளா , மேற்கு வங்காளம் தவிர எல்லோரும் உண்மை செய்திகளை வெளியிடுகிறர்கள்.
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
07-ஜூலை-202017:22:15 IST Report Abuse
Balaji சீனா உண்மையை சொல்லவில்லை என்பது உலகறிந்த உண்மை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X