பொது செய்தி

இந்தியா

இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்கும் சீன நிறுவனங்கள்

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
இந்தியா, சீனா, பங்குகள், சீன வங்கி, China, china central bank, buying stakes, Indian companies, india, border dispute,

புதுடில்லி: எச்டிஎப்சி வங்கியின் ஒரு சதவீத பங்குகளை சீனாவின் மக்கள் வங்கி(pboc) வாங்கியுள்ளதாக கடந்த ஏப்ரல் மாத மத்தியில் பங்குச்சந்தையில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், இந்தியாவில் மேலும் சில நிறுவனங்களின் சில பங்குகளை வாங்கியுள்ளது. ஆனால், அவை ஒரு சதவீத வரம்பிற்குள் வருவதால், அவை கண்காணிப்பில் வரவில்லை. அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் 0.32 சதவீத பங்குகளையும், மருந்து துறையில் ஆதிக்கம் செலுத்தும் பிராமல் எண்டர்பிரைசசில் 0.43 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளது.

பிபிஓசி வசம் தற்போது, 3,100 கோடி ரூபாய் மதிப்புள்ள எச்டிஎப்சி பங்குகளும், ரூ.137 கோடி மதிப்புள்ள பிரமல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகளும், ரூ.122 கோடி மதிப்புள்ள அம்புஜா சிமென்ட் நிறுவனத்தின் பங்குகளும் உள்ளன.

கடந்த 2019ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் அம்புஜா சிமென்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளில், 63 லட்சம் பங்குகள் சீன வங்கி வசம் இருந்தது. அதில், 2019ல் மட்டும், சிறிது சிறிதாக 16 லட்சம் பங்குகளை வாங்கியது. அதே ஆண்டில், பிரமல் நிறுவனத்தில் 0.43 சதவீத பங்குகள் சீன வங்கியிடம் சென்றது.

கொரோனா தொடர்பான பிரச்னை காரணமாக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்குவதை தவிர்க்கும் வகையில், பல வளர்ந்த நாடுகள், வெளிநாட்டு முதலீடு தொடர்பான விதிகளை திருத்தியது. ஆனால், இந்தியா அது போன்ற நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.


latest tamil news
இது தொடர்பாக சில ஆய்வாளர்கள் கூறுகையில், எரியும் வீட்டில் திருடு என்ற தந்திரம் சீனா பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறது. அரசில் கொள்கை முடிவு எடுப்பவர்கள் இதனை கவனத்தில் வைத்து கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

மற்றொரு ஆய்வாளர் கூறுகையில், 2014 ல் வர்த்தக உறவு அடிப்படையில் இருந்த முதலீடு, 2020ல் முற்றிலும் மாறிவிட்டது. உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி முதல் தொழில்நுட்பம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் முதலீடு செய்பவர்களின் சீன நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siriyaar - avinashi,இந்தியா
08-ஜூலை-202012:27:37 IST Report Abuse
siriyaar இந்தியா WTO, UN, Olympic போன்ற அமைப்புகளில் இருந்து வெளியே வரவேண்டும். 80 சத அதி குடிகாரர்கள் உள்ள நாட்டை வளப்படுத்த முடியாது. அரசாங்கம் முதலில் மது புகை போன்ற பழக்கங்களை ஒழிக்க வேண்டும். ஆனால் அரசு நடத்தும் பலர் சாரயா வியாபாரிகளாக இருந்து முன்னேறியவர்கள், திமுக அதிமுக போன்ற பல கட்சிகள் இது இல்லாவிட்டால் அமைப்பு ரீதியாக காலியாகி விடும். ஏன் சுப்ரீம் கோர்ட்டுக்கு கூட பாதி நீதிபதிகள் போதும். அதனால் கோர்ட் முதல் அரசியல் வாதி வரை இதை மூட மாட்டார்கள், ஏன் மோடிக்கு கூட பயம் பிஜேபி காணாமல் போயிடுமோன்னு அதனால் சர்வதேச அளவில் ஒதுங்கியிருப்பது நல்லது.
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
08-ஜூலை-202009:17:40 IST Report Abuse
mathimandhiri பன்னாட்டு நிதி நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் முதலீடும் செய்வது என்றுமே நடைமுறையில் இருப்பது தான். சந்தை ஏற்ற இயக்கத்துக்கு அவர்கள் பங்களிப்பு முக்கியமானதாக இருந்து வருகிறது. ஆனால் சீனாக்காரன் இங்கு வரும் நோக்கம் சொல்லாமலேயே புரிய வேண்டும். அவன் குறிக்கோளும் எண்ணமும் எந்த நாட்டுக்கும் நல்லது செய்யப் போவதில்லை. மற்ற முதலீட்டார்களை நடத்துவதை போல் அவனை நடத்தக் முடியாது . அதிலும் நம் அரசு நிறுவனங்களாகிய ஹெச் ஏ எல், பி எச் இ எல் , பி ஈ எல், ஓ என் ஜீ சி , மற்றும் எத்தனையோ முன்னணி அரசு வங்கிகள், நிறுவனங்கள் எல்லாம் இன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு விட்டன.அவற்றில் சில பங்குகளோ அல்லது சில லட்சம் பங்குகளோ எதுவானாலும் இவன் வசம் செல்வது நல்ல நோக்கத்திற்காக அல்ல என்பது உண்மை. அவன் பல விலை போன நம்மூர் பினாமி பெயர்களில் கூட வாங்கி குவிக்கும் வாய்ப்பும் உண்டு. இப்போதே தடுத்து நிறுத்துவது நல்லது.
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
08-ஜூலை-202009:01:48 IST Report Abuse
mathimandhiri pan naa
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X