பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரும் சீனா; ஹாங்காங் எதிர்ப்பு

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Hong Kong, Schools, Violate, National Security Law, china, education, protest, ஹாங்காங், பள்ளி, பாடத்திட்டம், சீனா, எதிர்ப்பு

ஹாங்காங்: சீன அரசால் கட்டுப்படுத்தப்படும் ஹாங்காங் கல்வித்துறை ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சீனா அமல்படுத்த முயன்று வரும் தேசிய பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிரான பாடத்திட்டங்கள் கொண்ட புத்தகங்களை நீக்க வலியுறுத்தி உள்ளது.

சமீபத்தில் சீனா தனது ஐந்து அம்சக் கோரிக்கைகள் ஹாங்காங்கை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்று வருகிறது. இதற்கு ஜனநாயகவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சீன கம்யூனிச அரசு பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹாங்காங்கை முழுவதுமாக சீன நாட்டுடன் இணைக்க நினைக்கிறது. இது சர்வாதிகாரத்தின் உச்சம் என உலக நாடுகள் விமர்சித்து வரும் நிலையில் சீனா தனது தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதில் மும்முரம் காட்டி வருகிறது.


latest tamil news


இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீது கடும் எதிர்ப்பை தெரிவித்து அவர்களை கைது செய்துவருகிறது சீனா. இந்நிலையில் ஹாங்காங் பள்ளிகளில் சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக இருக்கும் பாடங்களை நீக்க சீனா வலியுறுத்தியுள்ளது. சீன அரசுக்கு எதிரான செயல்கள் செய்யும் அமைப்புகள் குறித்து வரலாற்றுப் பாடங்களில் இடம்பெறக்கூடாது என கட்டாயமாக தெரிவித்துள்ளது.

ஆகவே தற்போது பள்ளி பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. புரட்சியாளர்களின் கருத்துக்கள் கட்டாயமாக பாடத்திட்டங்களில் இடம்பெறக் கூடாது. அவ்வாறு இடம்பெற்றால் அதனை படிக்கும் மாணவர்களும் தற்காலத்தில் சீன அரசை எதிர்க்கும் சூழல் உருவாகும் என சீனா கருதுகிறது. இதனை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.


latest tamil news


சவுத் சைனா மார்னிங் போஸ்ட் இதழில் இந்த செய்தி வெளியாகி உள்ளது. சீன கம்யூனிச அரசு எடுக்கும் எந்த முடிவுகளும் சர்வாதிகாரம் மிக்க அந்நாட்டில் அவ்வளவு எளிதில் வெளிவராது. அரசுக்கு எதிரான எந்த செய்தி வெளியிட்டாலும் அந்த செய்தி நிறுவனம் முடக்கப்படும். கடந்தகால ஹாங்காங் வரலாற்றில் சீனாவின் அடக்குமுறைக்கு எதிராக போராடிய புரட்சியாளர்கள் பற்றி பாடங்களில் வரக்கூடாது என சீன அரசு திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளது. இதனால் பாடங்களில் மாற்றங்களை கொண்டுவர முயல்கிறது. இதற்கு ஜனநாயகவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


latest tamil news


சீனாவின் இந்த அடக்குமுறை வன்மையாக கண்டிக்கத்தக்கது என அவர்கள் கூறியுள்ளனர். பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹாங்காங் சீனாவின் முழு கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னிச்சையாக செயல்படும் தன்மை கொண்டது. இதனை மாணவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டும். சீனாவின் அடக்குமுறைக்கு எதிராக போராடிய புரட்சியாளர்கள் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என ஹாங்காங் அரசு கருதுகிறது. ஆனால் இதற்கு தற்போது சீனா முட்டுக்கட்டை போடுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
07-ஜூலை-202023:11:56 IST Report Abuse
elakkumanan காண் கிராஸ் செஞ்சது போக, நமது தீய சக்தி இந்த விஷயத்தில், அவருடைய தகுதிக்கு மீறிய உழைப்பை கொடுத்து, டாஸ்மாக் மாநிலத்தை உண்மையை வன்மையாக எதிர்க்கும் போர்குணமுள்ள மாநிலமாக (மக்களை ) உருவாக்கியுள்ளார்....... உண்மையை சொன்னா, இன்றைய சன் டிவி தலைமுறை வன்மையா மறுப்பை தெரிவிக்கிறது..............கல்வி துறையில் சீரழிப்புக்கும் எமது தீய சக்தியே மூத்த முன்னோடி..........................மெரினா தலைவன் புகழ் ஓங்குக......................சர்வதேசம்.......சர்வ நாசம்............................. தலைவன் ஒரு சகாப்தம்............................திருட்டுத்தனத்தை கொஞ்சம்கூட திருட்டுத்தனம் இல்லாமல், எல்லோருக்கும் தெரியும் வகையில் வாழ்ந்து காட்டிய வரலாறு.................
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
07-ஜூலை-202019:56:25 IST Report Abuse
mathimandhiri நம் நாட்டில் அக்பர், ஷாஜஹான், அவுரங்க சீப் போன்றோர் சக்கரவர்திகளாக தி கிரேட் என்ற அடைமொழியுடனும், திப்பு பெரிய தேசத்து தலைவன் போலவும் காங்கிரஸ் காலத்தில் பாடத்திட்டத்தில் வர்ணிக்கப் பட்டு மாணவர்கள் தலையில் ஏற்றப்பட்டது அவர்கள் எல்லாம் பொற்கால ஆட்சி தந்து மக்களைகே காப்பற்றினார்களாம். அவர்களின் சிறப்புக்களை வர்ணித்துக் கூறாத பள்ளிப் பட நூலே இல்லை. இதற்கெல்லாம் காரணம் எல்லோரும் அறிந்ததே. எதிர்ப்புக்கு குரல் இல்லாத தலைவராக ஆண்டவர் நேரு. கல்வித் துறை மிஷினரிகள் கைகளில் தான் இந்நாட்டில். இது கவனத்துக்கு வராமல் இருக்க வில்லை.
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஜூலை-202017:48:36 IST Report Abuse
Janarthanan இதை தான் காங்கிரஸ் இந்தியாவில் செய்துள்ளது பல வரலாறுகளை மறைத்து விட்டது இந்தியா முகலாய மன்னர்களுக்கு கொடுக்க பட்ட முக்கியத்துவம் மற்ற மன்னர்களுக்கு கொடுக்க வில்லை ??? சுகந்திர போராட்டம் ஒரு குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமாக்க பட்டு விட்டது ????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X