பொது செய்தி

இந்தியா

இணையத்தில் வைரலாகும் மூங்கில் டிபன் கேரியர்

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Tiffin Carriers, Bamboo, Netizens Amazed, Manipur organisation, eco-friendly, bamboo tiffin, மூங்கில், டிபன், கேரியர்

புதுடில்லி: இணையத்தில் அவ்வப்போது வித்தியாசமான சில பொருட்கள் வைரலாகும். அதுபோல தற்போது ஒரு பொருள் வைரலாகியுள்ளது. அது என்னவென்று கேட்கிறீர்களா? அதுதான் மூங்கிலால் செய்த டிபன் கேரியர்..!

வனத்துறை அதிகாரி சுதா ராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஓர் பதிவை இட்டுள்ளார். அதில் இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத மூங்கிலால் செய்யப்பட்ட டிபன் கேரியர் புகைப்படத்தை வெளியிட்டார். எவர்சில்வர் கேரியர்கள் போலவே இதிலும் மூடி மிகவும் கெட்டியாக மூடும் தன்மை கொண்டது. இதில் சாதம், காய்கறிகள், சாம்பார் உள்ளிட்டவற்றை வைத்துக்கொள்ளலாம். வெளியே சிந்தாது. மிகவும் நேர்த்தியாக செய்யப்பட்ட இந்த கைவினைப்பொருள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.


latest tamil news


கிழக்கிந்தியாவைச் சேர்ந்த கோலன் நாயக் என்பவர் இதனை வடிவமைத்துள்ளார். இன்று டப்பர்வேர் உள்ளிட்ட பல உயர்தர பிளாஸ்டிக் கேரியர்கள் வந்துவிட்டன. இது சூடு பட்டால் உருகாது, இதில் தாராளமாக சூடான உணவுப் பொருட்களை வைத்துக்கொள்ளலாம் என விளம்பரம் செய்யப்படுகிறது.

ஆனால் மணிப்பூர், மிசோரம் உள்ளிட்ட கிழக்கிந்திய மாகாணங்களில் உள்ள இயற்கை கைவினைப் பொருட்கள் விலை குறைந்ததாகவும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்காததாகவும் உள்ளன. இவற்றை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது என அவர் தெரிவித்துள்ளார். இந்த இயற்கை டிபன் கேரியர் நமது உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மிகவும் அவசியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
07-ஜூலை-202020:25:27 IST Report Abuse
S. Narayanan ஆகா மிகவும் அருமை. பாராட்டுக்கள். உபயோகித்த பின் தான் அதில் சூடு நிற்குமா என்பது தெரியும்
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-ஜூலை-202022:41:22 IST Report Abuse
தமிழ்வேல் உணவு உலோகப்பாத்திரத்தில் இருப்பதைவிட மரப்பாண்டத்தில் நெடு நேரம் சூடாகவே இருக்கும். அதோடு பாத்திரம் சுடாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X