பொது செய்தி

இந்தியா

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்: வைரலாகும் மும்பை போலீசாரின் டுவீட்

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Mumbai Police, Social Distancing, Dhoni, Birthday, Twitter, MSD, mumbai, maharashtra, corona, covid 19, coronavirus, மும்பை, போலீஸ், சமூக இடைவெளி, தோனி, பிறந்தநாள், வாழ்த்து, டுவிட்டர்

இந்த செய்தியை கேட்க

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு, மும்பை போலீசார் தனது டுவிட்டர் பக்கத்தில் வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி இன்று (ஜூலை 7) தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பல்வேறு பிரபலங்களும் சமூகவலைதளங்களில் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மும்பை போலீசார் தங்களது டுவிட்டர் பக்கத்தில், மைதானத்தில் ஸ்டம்ப், பந்து மற்றும் பேட், கையுறை ஆகியவற்றுடன் இருக்கும் புகைப்படத்துடன், எம்.எஸ்.டி என சுருக்கமாக அழைக்கப்படும், தோனிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, சமூக இடைவெளியை பின்பற்றுங்கள் (Maintain Social Distance) என்பதை வலியுறுத்தி இருந்தனர்.


latest tamil news


மேலும் 'தோனி வழியில் செய்யுங்கள், வெளியே வர வேண்டாம். ஸ்டம்பிற்குள் கூலாக இருங்கள். ஹாப்பி பர்த்டே கேப்டன் கூல்' என பதிவிட்டிருந்தனர். ஒரே பதிவில் வாழ்த்து மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமயோசிதமாக பதிவிட்ட மும்பை போலீசாரின் பதிவுக்கு, சில மணி நேரங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்ததோடு, ஆயிரக்கணக்கானோர் ரீ-டுவிட் செய்தனர். தொடர்ந்து மும்பை போலீசாரின் வித்தியாசமான டுவிட்டர் பதிவுக்கு பாராட்டும், தோனிக்கும் பிறந்தநாள் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
07-ஜூலை-202020:16:51 IST Report Abuse
S. Narayanan குட். ரூம் போட்டு சிந்தனை செய்து செய்துருக்கிறார்கள். பாராட்டுக்கள்.
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
07-ஜூலை-202019:29:22 IST Report Abuse
Raj பிறமாதமான யோசனை
Rate this:
Cancel
07-ஜூலை-202019:11:10 IST Report Abuse
raghasrin அருமை. பீசிசிஐ எம்எஸ்கே பிரசாத் அவரை ஓரங்கட்டிய நிலையில் மும்பாய் போலீஸ் அவரை கௌரவித்தது பாராட்டுக்குறியது. திறமைசாலியை நாடு பாராட்டும்.மும்பாய் போலீஸுக்கு நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X