பொது செய்தி

இந்தியா

சிபிஎஸ்இ பாட திட்டம் 30 சதவீதம் குறைப்பு

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சிபிஎஸ்இ, பாடதிட்டம், குறைப்பு,  ரமேஷ் பொக்ரியால், CBSE, syllabus, class 9, class 12, Covid-19 in india, pandemic, education, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown,

புதுடில்லி : நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு , வரும் கல்வியாண்டில், 9 முதல் 12ம் வகுப்பு பாடத்திட்டங்கள் குறைக்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளதாக மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலகம் மற்றும் இந்தியாவில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களின் பாடதிட்டத்தை குறைக்கும்படி சி.பி.எஸ்.இ.,க்கு அறிவுரை வழங்கப்பட்டது. பாட திட்டம் குறைப்பது தொடர்பாக, கடந்த சில வாரங்களுக்கு முன்னர், கல்வியாளர்களின், ஆலோசனைகளை தெரிவிக்கும்படி நான் அழைப்பு விடுத்தேன். இதனை ஏற்று ஆயிரகணக்கானோர், தங்களின் ஆலோசனையை தெரிவித்தனர். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கற்பித்தலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, மாணவர்களின் பாடதிட்டம் 30 சதவீதம் குறைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news


சி.பி.எஸ்.இ., வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா காரணமாக, இந்தியா மற்றும் உலகில் நிலவும் சுகாதார அவசர நிலை காரணமாக, பள்ளிகளில் வகுப்புகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு 2020-21 கல்வியாண்டில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கான பாடதிட்டங்கள் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தகுந்த ஆலோசனைக்கு பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
07-ஜூலை-202020:14:03 IST Report Abuse
S. Narayanan ஒரு பள்ளியில் ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை சுமார் நானூறு மாணவர்கள் இருக்கலாம். அவர்களுக்கு தேவையான புத்தகங்கள் வழங்கி விட்டு அவர்களை வாரத்திற்கு ஒரு முறை பள்ளிக்கு வரவழைத்து ஒவ்வொரு பருவத்துக்குமான எல்லா பாடங்களையும் விவரித்து மாணவர்களுக்கான சந்தேகங்களை தீர்த்து விடலாம். சற்று பின்தங்கிய மாணவர்களுக்கு தேவையானால் ஒரு எக்ஸ்ட்ரா வகுப்பு எடுக்கலாம்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
07-ஜூலை-202018:34:23 IST Report Abuse
vbs manian எதற்குமே உதவாத பல விஷயங்கள் பள்ளிகளில் கற்பிக்க படுகின்றன. அறிவியல் கணிதம் கப்யூட்டர் பொருளாதாரம் ஜாக்ராபி தகவல் வணிகம் ஆங்கிலம் தாய்மொழி உளவியல் தவிர வேறு விஷயங்களை அறவே தவிர்க்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X