பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் சமூக பரவல் இல்லை: முதல்வர் இபிஎஸ்

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
Tamilnadu, CM, EPS, CoronaVirus hospital, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, chennai, தமிழகம், முதல்வர், இபிஎஸ், கொரோனா, வைரஸ்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப்பரவலாக மாறவில்லை என முதல்வர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் ரூ.127 கோடி மதிப்பிலான கொரோனா சிறப்பு மையத்தை திறந்து வைத்து முதல்வர் இபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கிண்டியில் கொரோனா சிகிச்சை மையத்தில் எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையாக அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மனஅழுத்தத்தை போக்கிக் கொள்ள யோகா பயிற்சிக்கூடம், வைபை சேவை உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் உள்ளன. டாக்டர்களுடனும், உறவினர்களுடனும் நோயாளிகள் காணொலி மூலம் பேசும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


latest tamil news


தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 58 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். தமிழக அரசிடம் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் உள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான முறைளயில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.


ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு இல்லை



latest tamil news



தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப்பரவலாக மாறவில்லை. சென்னையில் கடுமையான ஊரடங்கு நடவடிக்கையால் கடந்த 2 நாட்களாக பாதிப்பு குறைந்துள்ளது. மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம். மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டியுள்ளது. அதனால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை. பொதுமக்கள் மாஸ்க் அணியவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும். அரசின் நிதிநிலைக்கு ஏற்ற வகையில் மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருகிறோம்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஜூலை-202023:54:20 IST Report Abuse
Ramesh R தமிழகத்தில் கொரோனாவே இல்லை - என்ன நீங்கள்
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
07-ஜூலை-202023:35:16 IST Report Abuse
தல புராணம் இல்லவே இல்லை.. ஒருபோதும் இல்லை, ங்கொப்புரானே இல்லவே இல்லை..இது உண்மை இல்லை..
Rate this:
Cancel
Kadaparai Mani - chennai,இந்தியா
07-ஜூலை-202021:05:35 IST Report Abuse
Kadaparai Mani சென்னை கிண்டியில் ரூ.127 கோடி மதிப்பிலான கொரோனா சிறப்பு மையத்தை திறந்து வைத்து முதல்வர் இபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தலைப்பு இப்படித்தான் இருக்கத்தான் வேண்டும்
Rate this:
G.Kirubakaran - Doha,கத்தார்
07-ஜூலை-202022:45:47 IST Report Abuse
G.KirubakaranOur media deliberately hide the Tamil nadu govt -excellent works and all the efforts to eradicate Corona...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X