கொரோனா குறித்து பீஹார் அரசுக்கு கவலையில்லை: தேஜஸ்வி யாதவ்

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Bihar, Tejashwi Yadav, Covid-19, Government, election, corona, CoronaVirus, Polls, கொரோனா, பீஹார், அரசு, கவலையில்லை, தேஜஸ்வி யாதவ்

இந்த செய்தியை கேட்க

பாட்னா: பீஹாரில் கொரோனா தொற்றை விட வரவிருக்கும் தேர்தல் குறித்து மட்டுமே மாநில அரசு கவனம் செலுத்தி வருவதாக ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரான தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

பீஹாரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,125 ஆக உள்ளது. 8,997 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 97 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தாண்டு இறுதியில் பீஹார் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. பீஹார் சட்டசபை தேர்தலுக்கான வியூகத்தை வகுப்பதில், பா.ஜ., முதலிடத்தில் இருக்கிறது. நிதிஷ்குமார் தலைமையில் கூட்டணி என கூறப்பட்டிருந்தாலும், பா.ஜ., தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறது. கொரோனா தாக்கம் நீடிப்பதால் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர், தபால் மூலம் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்ய தேர்தல் கமிஷன் வாய்ப்பு வழங்கியுள்ளது.


latest tamil news



இந்நிலையில், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛பீஹாரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் அரசு பரிசோதனை குறித்தோ, சிகிச்சை குறித்தோ கவலைப்படவில்லை.
ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் வரவிருக்கும் தேர்தல் குறித்து ஓய்வின்றி செயல்பட்டு வருகிறது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மறைக்கிறது. மேலும் அரசு கொரோனா வைரஸ் தொற்று குறித்து கவனம் செலுத்தாவிட்டால், ஆகஸ்ட் - செப்டம்பருக்குள் அதிக கொரோனா பாதிப்பு சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது' என பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Desi - Chennai,இந்தியா
08-ஜூலை-202001:11:18 IST Report Abuse
Desi இந்த புள்ள அந்த புள்ள காப்பி அடிக்குது
Rate this:
Cancel
07-ஜூலை-202021:04:02 IST Report Abuse
ஆப்பு எதிர்க்கட்சி ஆளுங்களெல்லாம் ரொம்ப அக்கறையா அறிக்கை விட ஆரம்பிச்சுட்டாங்க. தமிழநாட்டுக்கு சுடலை, மஹாராஷ்டிரா வுக்கு ஃபட்னாவிஸ், பிஹாருக்கு இவுரு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X