பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,18,594; பலி 1,636 ஆக உயர்வு

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Corona Virus, Corona Cases, Tamil nadu, Discharge, TN Corona Updates, TN Health, TN Fights Corona, Corona, TN Govt, Covid-19, Positive Cases, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 07) மேலும் 3,616 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆகவும், பலி எண்ணிக்கை 1,636 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 3,551 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 65 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 96 ஆய்வகங்கள் (அரசு-50 மற்றும் தனியார் 46) மூலமாக, இன்று மட்டும் 36,938 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 14 லட்சத்து 13ஆயிரத்து 435 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.


latest tamil news


இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,180 பேர் ஆண்கள், 1,436 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 72,550 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 46,022 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 22 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 4,545 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 116 ஆக உள்ளது.


வயது வாரியாக பாதிப்பு


இன்று மட்டும் கொரோனா பாதித்த 65 பேர் உயிரிழந்தனர். அதில், 20 பேர் தனியார் மருத்துவமனையிலும், 45 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,636 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 45,839 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 5,877 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 98 ஆயிரத்து 350 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 14 ஆயிரத்து 367 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil - chennai,இந்தியா
08-ஜூலை-202012:51:32 IST Report Abuse
Tamil சரி ஆகும் பொழுது மறுபடி திறந்து விட்டால் அடுத்த வருடம் வரை அனுபவிக்க வேண்டி வரும்.. இவங்க சாகடிக்காம விடமாட்டாங்க.
Rate this:
Cancel
shankar - milton,கனடா
07-ஜூலை-202019:56:10 IST Report Abuse
shankar இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் 4545. இது தான் தலைப்பாக இருக்க வேண்டும் .
Rate this:
Cancel
07-ஜூலை-202019:48:31 IST Report Abuse
gopalakrishnan thiagarajan iyer தயவுசெய்து டிஸ்சார்ஜ் க்கும் முக்கியத்வம் கொடுக்கவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X