மும்பையில் கொரோனா பரவல் மோசமாக உள்ளது ; தேவேந்திர பட்நாவிஸ்

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

மும்பை : மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மும்பையில் தொற்று பரவல் மோசமாக உள்ளதாக முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்தார்.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்பு அதிகமான மாநிலங்களில் மஹா.,முன்னிலையில் உள்ளது. மாநில அரசு பாதிப்புகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாநிலத்தின் நோய் தொற்றுக்கு மும்பை, தானே உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தானே, நேவிமும்பை, கல்யாண் மற்றும் மிராபயந்தர், ராய்காட் மாவட்டத்தில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான பட்நாவிஸ் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய பயணம் மேற்கொண்டார். மாநிலத்தின் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களையும் , பால்களில் உள்ள 1000 படுக்கை வசதிகள் குறித்தும் பார்வையிட்டார்.

தானே நகராட்சி ஆணையர் டாக்டர் விபின் ஷர்மாவைச் சந்தித்து, தொற்றுக்கான சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பரிந்துரைத்தார். பின் அவர் மேலும் கூறுகையில், மஹா.,வை பொறுத்தவரை மும்பை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நோய் தொற்றின் பரவல் மோசமாக உள்ளது. நோய் பாதிப்புகளை குறைக்க வேண்டுமானால், முதலில் பரிசோதனைகளை தினமும் அதிகப்படுத்த வேண்டும். அதன்மூலமாக பாதிக்கப்பட்டவர்களை விரைவாக கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும். அதனால் ஒரு தெளிவு கிடைக்கும். அதற்குரிய தீர்வுகளையும் காண முடியும். எந்தவித நிர்வாக அமைப்புகளும் பாதிப்பு தொடர்பாக புள்ளி விபரங்களை மறைக்க கூடாது.


latest tamil news



ஏனெனில் இது பாதிப்பை கையாள்வதற்கான நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்கும். நிதி ரீதியாக பலவீனமாகவும், உள்கட்டமைப்பு மற்றும் மனிதவளம் தேவைப்படும் குடிமை அமைப்புகளிலும் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும். நகராட்சி நிறுவனங்களுக்கு அரசு நிதி ஒதுக்கியிருந்தாலும், அனைத்து குடிமை அமைப்புகளும் நிலையான நிலையில் இல்லை. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க குடிமை அமைப்புகள் தற்போது தனியார் மருத்துவமனைகளை நம்பியுள்ளதால், அவர்களுக்கு சரியான உள்கட்டமைப்பு மற்றும் மனிதவளத்தை அரசு வழங்க வேண்டும். கொரோனா தொடர்பாக நான் அறிந்தவற்றை அறிக்கையாக முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் சமர்ப்பிப்பேன். இவ்வாறு கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் வேந்தன் - சென்னை,இந்தியா
07-ஜூலை-202023:23:46 IST Report Abuse
தமிழ் வேந்தன் அதுக்கு என்ன இப்ப?
Rate this:
Cancel
Balasubramanian - Bangalore,இந்தியா
07-ஜூலை-202021:22:28 IST Report Abuse
Balasubramanian ஃபட்ணவிஸ் பாவூ (அண்ணே) நோயை வைத்து அரசியல் பண்ணக் கூடாது என்பது உங்களுக்கும் பொருந்தும்
Rate this:
Cancel
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
07-ஜூலை-202020:51:32 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam He is a very decent politician.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X