சீனாவுக்கு செல்ல வேண்டாம்: ஆஸ்திரேலியா எச்சரிக்கை

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

கான்பெரா: தன்னிச்சையாக தடுப்புக்காவலில் அடைத்து வைக்கப்படும் அபாயம் இருப்பதால், சீனாவுக்கு செல்ல வேண்டாமென, ஆஸ்திரேலியா தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.



latest tamil news



சீனாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கான அறிவுரையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்மார்ட் டிராவல் நிறுவனம் தனது இணையதளத்தில், தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என கருதி வெளிநாட்டினரை கைது செய்யக்கூடுமென எச்சரித்திருந்தது. ஆஸ்திரேலிய குடிமக்களை தன்னிச்சையாக தடுப்புக்காவலில் அடைத்து வைப்பதற்கான வாய்ப்புள்ளது என புதிய எச்சரிக்கையை வெளியுறவுத்துறை மற்றும் வர்த்தக துறை அமைச்சகம் சேர்த்துள்ளது.

சீனாவின் வூஹானில் இருந்து பரவி உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்று குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ஆஸ்திரேலியா கோரிக்கை விடுத்ததை அடுத்து ஆஸி., - சீனா இடையேயான தூதரக உறவு மோசமடைந்தது. ஆஸி.,பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை விதித்ததை அடுத்து இருநாடுகள் இடையேயான வர்த்தக ரீதியான உறவும் சிக்கலாகியுள்ளது. ஆஸ்திரேலியா தொடர்ந்து தனது குடிமக்களை சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாமென அறிவுறுத்தி வருகிறது. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் ஆஸ்திரேலியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல குடிமக்கள் உள்துறை அமைச்சகத்தின் உரிய அனுமதி பெற வேண்டுமென கூறியுள்ளது.


latest tamil news



மேலும் ஹாங்காங்கில் சீனா அமல்படுத்தியுள்ள புதிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவாக போராடுவோர் , ஆதரவு கோஷம் எழுப்புவது உள்ளிட்டவை தேசவிரோத குற்றம் என கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க வழி செய்கிறது. திங்களன்று புதிய சட்டம் குறித்த கூடுதல் தகவல்களை ஹாங்காங் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பாதுகாப்புப் படையினருக்கு ஆதாரங்களுக்காக யாருடைய அலுவலகத்திலும் சோதனை நடத்துவதற்கும், ஹாங்காங்கை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதற்கும் அதிகாரம் உள்ளது என கூறப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஆஸி.பிரதமர் ஸ்காட் மோரிசன், பிரிட்டனை போன்று புதிய பாதுகாப்பு சட்டத்தால் பாதிக்கப்படும் ஹாங்காங் குடிமக்களுக்கு அடைக்கலம் தர தயாராக இருப்பதாக அறிவித்தார். இது தொடர்பாக விரைவில் கூடவுள்ள கேபினட் கூட்டத்தில் விவாதிக்கப்படுமெனவும் கூறியிருந்தார். முன்னதாக கனடாவும் ஹாங்காங்கில் உள்ள தனது குடிமக்கள் தன்னிச்சையாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டு, சீனாவிடம் ஒப்படைக்கும் அபாயத்தில் இருப்பதாக எச்சரித்துள்ளதுடன், ஹாங்காங்குடனான ஒப்படைப்பு ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
08-ஜூலை-202004:03:10 IST Report Abuse
blocked user ஆஸ்த்ரேலியா சீனாவின் ஒரு பகுதி என்று இது வரை சொல்லவில்லை என்பது ஆச்சரியம்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
08-ஜூலை-202004:02:00 IST Report Abuse
blocked user சீனாவில் சீன மக்களுக்கே கூட பாதுகாப்பு கிடையாது. பிறக் ஆஸ்ற்ரேலியர்களை எப்படி பாதுகாப்பது.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
07-ஜூலை-202022:08:33 IST Report Abuse
Ramesh Sargam சீனாவுக்கு செல்ல வேண்டாம். அதே போல், சீனர்களையும் உங்கள் நாட்டிற்குள் சேர்க்கவேண்டாம். அவர்கள் வைரஸ் மக்கள். மிகவும் danger.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X