தனிமைப்படுத்துதல் மனநல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் ; தெலுங்கானா சுகாதாரதுறை

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

ஐதராபாத் : தெலுங்கானாவில் லேசான கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப் படுத்துதலில் உள்ளனர். தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு மனநல பிரச்னை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.latest tamil newsகொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தெலுங்கானாவில் கடந்த சில தினங்களாக பாதிப்பு கூடிக்கொண்டே செல்கிறது. தெலுங்கானா மாநிலத்தில் லேசான , அறிகுறியற்ற பாதிப்புகளுடன் கூடிய நோயாளிகளை வீட்டில்தனிமைப்படுத்துதல் முறையை கையாள தெலுங்கானா திட்டமிட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவமனை தட்டுப்பாடு காரணமாக பாதிப்புகளின் அடிப்படையில் நோயாளிகளை (லேசான பாதிப்பு) வீட்டில் தனிமைப் படுத்துவது உண்டு. தற்போது இது தெலுங்கானாவில் நல்ல ஊக்கமிக்கும் முடிவுகளை தர துவங்கியது.

எவ்வாறாயினும், நோய் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களும் வீட்டுத் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுவதில்லை. லேசான, மிகவும் லேசான மற்றும் அறிகுறியற்ற தனிமை கொண்ட நபர்கள் மட்டுமே வீட்டு தனிமைப்படுத்தலுக்கு பரிந்துரைக்கப்படுவார்கள். தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருப்பவர்களுக்கு இது மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. இது அவர்களை துன்பகரமான அனுபவமாக இருக்கலாம். பாதிப்பு காரணமாக, சமூகத்தில் இருந்தும், குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தும் விலகி தனிமையில் வைக்கப்படுவது அவர்களை மன உளைச்சலுக்கு தள்ளுகிறது. பதட்டத்தை தூண்டுகிறது.


latest tamil newsமுக்கியமான மன கவலைகளை தூண்டுவதற்கான காரணியாக அமைகிறது. இது குறித்து பெங்களூரு தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (NIMHANS) சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் மனநல வழிகாட்டுதலின்படி, தனிமைப்படுத்துதல் என்பது உடல், உளவியல், உணர்ச்சி மற்றும் நிதி அளவிலான அழுத்தங்களுக்கு வழிவகுக்கும். மேலும் இது தனிமை, சலிப்பு, தனிநபர் சுதந்திரம் இழப்பு மற்றும் சமூக ஒற்றுமை இல்லாமையை கட்டுப்படுத்துகிறது.

தனிமைப்படுத்துதலின் போது வரும் பொதுவான நிலை கவலை. இது கொரோனா குறித்து தேவையற்ற அச்சங்களை உருவாக்கும். இது போன்ற சில பீதிகள் நோய் தாக்குதலுக்கு வழிவகுக்கும். குடும்பத்திலிருந்து தனிமைப்படுத்துதல், தொற்றுநோய்க்கு வழிவகுத்த நடத்தைகள் மற்றும் கடமைகளைச் செய்ய முடியாமல் போன நடத்தைகளுடன் தொடர்புடையஉதவியற்ற தன்மை மற்றும் குற்ற உணர்வு போன்றவை மனச்சோர்வு மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கும். தனிமைப் படுத்தப்பட்ட சிலர் தற்கொலை முயற்சியை மேற்கொள்ளவும் செய்கின்றனர். மருத்துவமனை தனிமைப்படுத்தலை எதிர்கொள்ளும் போது, மக்கள் இதை அச்சுறுத்தலாக பார்க்கிறார்கள். இது கடுமையான மன அழுத்த கோளாறை தூண்டும். PTSD (Post Traumatic Stress Syndrome) ஆபத்தும் உள்ளது.


latest tamil newsகொரோனாவிற்கு சிகிச்சையளிக்க தற்போது பயன்படுத்தப்படும் மருந்துகள் புதிய அறிகுறிகளின் தோற்றம் அல்லது இருக்கும் அறிகுறிகளை அதிகப்படுத்தல் போன்ற வடிவங்களில் மனநல அறிகுறிகளை ஏற்படுத்தும். குளோரோகுயின், ஸ்டெராய்டுகள் மற்றும் ஆன்டி-ரெட்ரோவைரல்களின் பயன்பாட்டுடன் தொடர்புடைய பொதுவாக அறிவிக்கப்படும் மனநல அறிகுறிகளில் சில மனநோய், மயக்கம், மனநிலைக் கோளாறுகள் மற்றும் அறிவாற்றல் தொந்தரவுகள் ஆகும்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
07-ஜூலை-202021:17:50 IST Report Abuse
A.George Alphonse Every action there is always reaction.இதைப்பற்றியெல்லாம் கவலை பட்டால் எல்லாருமே கூண்டோடு கைலாசம் போகவேண்டியதுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X