புதுடில்லி: இந்தியா குளோபல் வீக் 2020- எனப்படும் மூன்று நாள் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் பிரதமர் மோடி நிகழ்த்தும் உலகளாவிய உரையாக கருதப்படுகிறது.

இங்கிலாந்து ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடு ஜூலை 9-ம் தேதி முதல் 11 ம் தேதி வரை வீடியோக கான்பரன்ஸ் வாயிலாக நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகள் குறித்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். .
நிகழ்ச்சியில் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், தகவல் தொழில்நுட்ப மற்றும் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் பல இங்கிலாந்தின் வெளியுறவு , உள்துறை ,சுகாதார செயலாளர் கள் மற்றும் சர்வதேச வர்த்தக செயலாளர் லிஸ் ட்ரஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
தவிர ஈஷா அறக்கட்டளையின் சத்குரு, வாழும் கலை அமைப்பின் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மற்றும் சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் என 250க்கும் மேற்பட்டோர் மற்றும் வணிகர்கள் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையார் கள் கலந்து கொள்வார்கள் என நிகழ்ச்சி அமைப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE