சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் நீதிபதி உள்பட 43 பேருக்கு கொரோனா: இருவர் பலி

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020
Share
Advertisement

கோவை: கோவையில், இன்று(ஜூலை 7) ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்தனர். இதன்மூலம், பாதிப்பு எண்ணிக்கை, 839 இறப்பு எண்ணிக்கை, 8 ஆக உயர்ந்தது.



latest tamil news


கோவை மாவட்ட விரைவு நீதிமன்றம் எண் ஒன்றில் பணியாற்றி வரும், நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நீதிபதிக்கும் அவருடன் தொடர்புடையவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், கோவை மாவட்ட விரைவு நீதிமன்றத்தின் எண் 2ல் பணியாற்றி வரும், ஆண் நீதிபதி, 33. கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், போத்தனூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் 42 வயது பெண் போலீஸ்க்கும் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதுபோக, மரக்கடை, செட்டி வீதி, மசக்காளிபாளையம், செல்வபுரம், கணபதி, ஆர்.எஸ்.புரம்., ஜி.என்.மில்ஸ், காமாட்சிபுரம், நேருநகர், தெலுங்குபாளையம், நாராயணா அவென்யு, பொள்ளாச்சி, பீளமேடு பாலன் நகர் ராயப்பன் வீதி, ஜோதிபுரம், குனியமுத்தூர், சுகுணாபுரம், செல்வபுரம் அய்யப்பா நகர், தெலுங்குபாளையம், கே.கே.புதுார், ஹோப்காலேஜ், பி.என்.பாளையம், சுங்கம் பை பாஸ், கனியூர், எஸ்.எஸ்.குளம்.,என ஒரே நாளில், ஆண்கள் 25, பெண்கள் 18, சிறுவர், என மொத்தம் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள், கோவை இ.எஸ்.ஐ., மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம், கோவை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 839 ஆக உயர்ந்தது. அதேபோல், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 15 ஆண்கள், 15 பெண்கள் மற்றும் 3 சிறுமிகள் என மொத்தம் 33 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். கோவை மாவட்டத்தில் உள்ள இ.எஸ்.ஐ.,மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தற்சமயம், 548 பேர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


latest tamil news



முடிவு கிடைப்பதில் தாமதம்



கோவை அரசு மருத்துவமனையின், கொரோனா ஆய்வகத்தில் பணியாற்றி வந்த ஒருவருக்கு தொற்று ஏற்பட்டதால், ஆயவகம் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டது.

கோவையின் 4 தனியார் ஆய்வகங்கள் முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அதிக பரிசோதனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, காப்பீட்டு திட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட ஆய்வகங்கள் பரிசோதனை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டம் அண்மையில் தடை விதித்தது. இதனால், இ.எஸ்.ஐ., மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா ஆய்வகங்களுக்கு, அதிகளவிலான மாதிரிகள் கொடுக்கப்பட்டதால், பரிசோதனை முடிவு பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் மைக்ரோ பயாலஜி ஆய்வகத்தில் பணியாற்றி வந்த 25 வயது லேப் டெக்னீசியன் ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆய்வகம் தற்காலிகமாக மூடப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, மைக்ரோ பயாலஜி ஆய்வக துறை தலைவர் மைதிலி கூறுகையில், ''ஆய்வக டெக்னீசியன்கள், பணிக்கு பின் 7 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்ட டெக்னீசியன் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளாமல், சொந்த ஊரான விருது நகருக்கு சென்று வந்துள்ளார். இதுகுறித்து, தகவல் தெரிந்ததும் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது, அதில் அவருக்கு தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆய்வகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள உபகரணங்கள் பயன்படுத்த முடியாது. மேலும், தனியார் ஆய்வகங்கள் பரிசோதனை செய்யாத காரணத்தினால் தினமும் 2,500 வரை மாதிரிகள் பரிசோதனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது, அருகில் உள்ள மற்றொரு இடத்தில் ஆய்வகம் தடையின்றி தொடர்ந்து செயல்படும், ஆனால் முடிவுகள் கிடைப்பதில் சற்று தாமதமாகும்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X