பொது செய்தி

இந்தியா

தெலுங்கானாவில் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் பணி தீவிரம்

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020
Share
Advertisement

ஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைளில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



latest tamil news



தெலுங்கானாவில் கடந்த சில தினங்களாக நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தெலுங்கானாவின் பல்வேறு மாவட்டங்களிலும் தொற்று அதிகரிப்பது, மிதமான மற்றும் கடுமையான பாதிப்புடையவர்களுக்கு முக்கிய தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை வசதிகளை வழங்குவதற்காக அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மாவட்ட மருத்துவ மனைகளுடன் இணைக்கப்பட்ட மருத்துவரமனைகளில் பாதிப்பு குறித்து அறிவுறுத்தலில் சுகாதாரதுறை கவனம் செலுத்த தூண்டுதல்களை ஏற்படுத்தி வருகிறது.

ஐதராபாத் , ரங்காரெட்டி மற்றும் மேட்சல் தவிர மற்ற பிற மாவட்டங்களிலும் பாதிப்பு சற்று அதிகரித்த வண்ணம் உள்ளன. இதன் விளைவாக கொரோனா நோயாளிகளை மாநில தலைநகரில் உள்ள அரசு 3 ம் நிலை மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்துவதை விட, மாவட்டங்களில் கற்பிக்கும் (பயிற்சி) மருத்துவமனைகளில் தயார்நிலையை மேம்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன.


latest tamil news



இது தொடர்பாக நேற்று சுகாதாரதுறை அமைச்சர் எட்டெலா ராஜேந்தர் கூறுகையில், மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளிலும், கொரோனா நோயாளிகளுக்கு முழு அளவிலான சிறந்த சேவையை வழங்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும், பாதிப்புகளை கண்காணிக்க, கண்காணிப்பாளர்கள் அவசியமாக இருக்க வேண்டும். கொரோனா தொற்றுடையை நோயாளிகளை முறையாக சோதனை செய்வது, வழிகாட்டுதலின்படி, நடப்பதாக உறுதிபடுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். கடுமையான மற்றும் மிதமான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு மாவட்டங்களில் உள்ள பயிற்சி மருத்துவமனைகளில் சுகாதார சேவைகள் வழங்கப்பட வேண்டும்.

மிகவும் லேசான அறிகுறிகள் மற்றும் அறிகுறியற்ற நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அனைத்து வகையான நோயாளிகளின் தன்மையயை மருத்துவர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் தீவிரமாக கண்காணித்து முன்னேற்றத்தை உண்டாக்க வேண்டும். உயிர்காக்கும் மருந்துகள், என்-95 மாஸ்க், பிபிஇ கிட்ஸ் போன்றவற்றிற்கு தட்டுப்பாடு இல்லை என்பதை உறுதிப்படுத்த மாவட்ட மற்றும் போதனா மருத்துவமனைகளின் கண்காணிப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். முக்கியமான சுகாதார சேவைகள் தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு எந்த நிலையிலும் படுக்கைகள் மறுக்கப்படக் கூடாது என்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு கூறினார்.

மஹபூப்நகர் மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் தனது இல்லத்திற்கு செல்வதைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு பதிலாக பணியாளர்கள் குடியிருப்பில் தங்கியிருப்பதாகவும் சுகாதார அமைச்சர் பாராட்டினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X