பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா| Brazilian president Jair Bolsonaro tests positive for coronavirus | Dinamalar

பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (3)
Share
Brazilian President, Jair Bolsonaro, tests positive, coronavirus, corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, coronavirus count, corona brazil, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, worldwide crisis, brazil

பிரேசிலியா, : கொரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக 2வது இடத்தில் பிரேசில் உள்ளது. அங்கு 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 65 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் பிரேசில் அதிபர் ஜார் போல்சேனாரோவுக்கு கொரோனா உறுதியானது. இதுபற்றி அவர் தனியார் தொலைக்காட்சியில் கூறினார். அப்போது, 'காய்ச்சல் உள்ளது, ஆனாலும் நலமாக இருக்கிறேன். ஹைட்ராக்சிகுளோரோகுவின் மருந்து எடுத்து கொள்கிறேன்' என்றார்.


latest tamil news


இவர் சமீபத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையான சமூக விலகல் பின்பற்றல், மாஸ்க் அணிதல் போன்றவற்றை விமர்சனம் செய்தார். மக்கள் அனைவரும் கொரோனாவுக்கு அஞ்சி வீட்டில் முடங்க வேண்டாம் என அடிக்கடி கூறிவந்தார். மேலும் பல்வேறு இடங்களுக்கு அவர் மாஸ்க் அணியாமல் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X