பொது செய்தி

இந்தியா

அஞ்சல் துறை மூலம் வீடு தேடி வரும் காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதம்

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

வாரணாசி : கொரோனா தொற்றுக்கு மத்தியில், காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதத்தை அஞ்சல் துறை வீட்டிற்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வட இந்தியாவில் ஆனி சிவனுக்குரிய சிறந்த மாதமாக கருதப்படுகிறது. வடமாநிலங்களில் சிவனுக்காக காவடி யாத்திரையை மேற்கொள்ளும் பழக்கம் உள்ளது. ஆனால் தற்போது கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் இது போன்ற மத நடவடிக்கைகளை தடை செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல முடியாத பக்தர்களுக்கு உதவும் வகையில், கோவில் பிரசாதத்தை நாட்டின் எந்தவித பகுதிக்கும் அஞ்சல்துறை மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news



தற்போது, ஊரடங்கு நேரங்களில் கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய இயலாத பக்தர்களுக்கு, கோவில் பிரசாதத்தை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய இயலாத பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் ஆன்லைன் மூலமாகவும் விநியோகிக்கப்படுகிறது. லட்டு பிரசாதத்தை பெற பக்தர்கள் ஆர்வமாக உள்ளதாகவும், இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது இதே போல், காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதத்தை அஞ்சல் துறை மூலம் பக்தர்களுக்கு வீட்டிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அஞ்சல் துறையின் இந்த முயற்சிக்கு மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பாராட்டு தெரிவித்துள்ளார்.


latest tamil news



கோவில் பிரசாதத்தை பெற, எந்தவொரு தபால்நிலையத்தில் (அஞ்சல்) இருந்தும் ரூ.251 க்கு மின்ணனு பண ஆணையை (EMO) வாரணாசியின் கிழக்கு பிரிவு மூத்த கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும். வாரணாசியில் சுவாமி தரிசனத்திற்கு சமூக இடைவெளியுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த பிரசாத பார்சலில், காசி விஸ்வநாதர் கோவிலின் ஜோதிர்லிங்கம், மகாமிருதுஞ்சய மகா யந்திரம், சிவ சாலிசா, ருத்ராக் ஜெபமாலை, உலர்ந்த பழங்கள், சாம்பல் மற்றும் ஒரு பாக்கெட் இனிப்புகள் ஆகியவை அடங்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
08-ஜூலை-202012:13:20 IST Report Abuse
Ray காசியில் விஸ்வநாதருக்கு நாங்கள் பாலாபிஷேகம் செய்தவுடன் பூஜாரி மாம்பழம் கொடுத்தார் அன்று காரைக்கால் அம்மையாருக்கு பிட்சாடனர் மாங்கனி தந்த திருநாள் நாங்கள் பாக்கியம் பெற்றோம்
Rate this:
Cancel
Kalyanaraman - Chennai,இந்தியா
08-ஜூலை-202000:44:24 IST Report Abuse
Kalyanaraman கங்கை தீர்த்தமும் இந்த ப்ரசாத பட்டியலில் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
07-ஜூலை-202023:23:47 IST Report Abuse
Bhaskaran ஆன்மீக வியாபாரம் .பிறகு இதற்கு சென்னையில்மயிலை மற்றும் கிளைகளில் ஸ்டாக்கிஸ்டுகள் இருப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X