கொரோனா அச்சம்:மனைவியை வீட்டிற்குள் விட மறுத்த கணவன்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கொரோனா அச்சம்:மனைவியை வீட்டிற்குள் விட மறுத்த கணவன்

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (4)
Share

பெங்களூரு: கொரோனா அச்சம் காரணமாக மனைவியை வீட்டிற்குள் விட மறுத்தார் கணவர்.



latest tamil news



கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25 ம் தேதி முதல் முதற்கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் 38 வயதுடைய பெண் ஒருவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது கணவர் வீட்டிற்கு திரும்ப முடியாமல் தவித்து வந்தார்.

மூன்று மாத தவிப்பிற்கு பின்னர் கர்நாடக மாநில அரசு ஒரு சில நிபந்தனைகளுடன் தளர்வுகளை அறிவித்தது. இதனை பயன்படுத்தி கொண்ட அப்பபெண் கணவர் வீட்டிற்கு திரும்பினார்.

ஆனால் கொரோனா அச்சம் காரணமாக கணவர் கொரோனா வைரஸ் பரவுவதை காரணம் காட்டி தன் மனைவியை வீட்டிற்குள் விட மறுத்தார் அதுமட்டுமல்லாது வேறு எங்காவது சென்று தனிமைப்படுத்திகொள்ள அறிவுறுத்தினார்.


latest tamil news



இதனையடுத்து அப்பெண் வர்தூர் போலீசில் புகார் அளித்தார். மேலும் பெண்கள் ஹெல்ப் லைனையும் துணைக்கு அழைத்தார். போலீசார் மற்றும் பெண்கள் ஹெல்ப் லைன் அதிகாரிகள் கணவருக்கு ஆலோசனை வழங்கியதுடன் கொரோனா அச்சம் குறித்த அவரது தவறான எண்ணங்களை உடைத்தனர். அதன் பின்னர் அப்பெண் தனது கணவர் வீட்டிற்கு சென்று தனிமைப்படுத்தப்பட்டார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X