பொது செய்தி

தமிழ்நாடு

அணியவில்லை முகக்கவசம்:விதித்தனர் அபராதம்

Added : ஜூலை 07, 2020
Share
Advertisement
 அணியவில்லை முகக்கவசம்:விதித்தனர் அபராதம்

உடுமலை:உடுமலை ஒன்றியத்தில், ஊரடங்கு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றாதவர்களுக்கு, 32 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை, பல வழிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகளில், இதன் வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது.கிருமிநாசனி தெளிக்கும் பணிகள் மற்றும் பொது இடங்களில் சமூக விலகல் பின்பற்றவும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நோய் பரவுதலை தவிர்க்க, பொதுமக்கள் வெளியில் செல்லும் போது, கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.உடுமலை மண்டல துணை பி.டி.ஓ., செல்வகுமார், துணை தாசில்தார் சந்திரசேகர் உட்பட நான்கு பேர் கொண்ட குழுவினர், ஊராட்சிகளில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆய்வுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். முகக்கவசம் அணியாதவர்களுக்கு, எச்சரிக்கை விடுப்பதும், அபராதம் விதித்தும், விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தி வருகின்றனர். கடந்த மாதம் 28ம் தேதி முதல், அதிகாரிகள் நடத்திய ஆய்வில், இதுவரை, 350 பேருக்கு, மொத்தமாக, 32 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X