பொது செய்தி

தமிழ்நாடு

ஏழைகளின் பசியை போக்க ரூ.9 கோடி வழங்கிய சத்குரு; ரூ.5 கோடிக்கு ஏலம்போனது அவரது ஓவியம்

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

கோவை: கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் பசியை போக்குவதற்காக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ரூ.9 கோடி வழங்கியுள்ளார்.



latest tamil news



ஈஷாவின் சமூக நலப் பிரிவான 'ஈஷா அவுட்ரீச்' அமைப்பானது கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கொரோனா நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தினமும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளித்து வருகிறது. மேலும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் உட்பட பல்வேறு பிரிவினருக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறது.


latest tamil news



இப்பணிகள் அனைத்தும் கோடிக்கணக்கான பொருள் செலவில் நடைபெறுகின்றன. எனவே, இதற்கு நிதி திரட்டும் விதமாக சத்குரு அவர்கள் 2 ஓவியங்களை வரைந்தார். அவருடைய முதல் ஓவியம் ரூ.4.14 கோடிக்கு ஏலம்போனது. இதையடுத்து, ஈஷாவின் பிரசித்தி பெற்ற காளையான 'பைரவா'வின் நினைவாக சத்குரு வரைந்த ஓவியம் கடந்த மாதம் ஆன்லைன் வழியாக ஏலம்விடப்பட்டது.

ஏலத்தின் கடைசி நாளான நேற்று முன்தினம் (ஜூலை 5) அந்த ஓவியம் ரூ.5.1 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த 2 ஓவியங்கள் மூலம் கிடைத்த ரூ.9.2 கோடி நிதியை சத்குரு 'ஈஷா அவுட்ரீச்' சின் நிவாரணப் பணிகளுக்கு தனது பங்களிப்பாக வழங்கினார். 2-வது ஓவியமானது முழுக்க முழுக்க இயற்கையான பொருட்களை கொண்டு சத்குரு வரைந்துள்ளார். நாட்டு மாட்டு சாணம், கரி, மஞ்சள், சுண்ணாம்பு ஆகியவற்றை மட்டும் பயன்படுத்தி அவர் அந்த ஓவியத்தை வரைந்துள்ளார்.


latest tamil news


இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆரம்பக் கட்டத்தை எட்டிய போதே, 'உங்களை சுற்றியிருக்கும் ஒருவர் கூட பசியால் உயிரிழக்காமல் பார்த்து கொள்ளுங்கள்' என்று ஈஷா தன்னார்வலர்களுக்கு சத்குரு வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
08-ஜூலை-202017:46:35 IST Report Abuse
Rafi நாட்டில் சாமியார்கள் தொழில் அதிபராகி கொண்டிருப்பது சமீப காலமாக அதிகரித்து கொண்டிருப்பது, அவர்களின் சொத்து பல மடங்கு உயர்ந்து கொண்டிருப்பதும், மக்கள் ஏமாளியாக்கப்பட்டு கொண்டிருப்பதும் புரிகின்றது.
Rate this:
Cancel
Nethiadi - Thiruvarur,இந்தியா
08-ஜூலை-202009:25:23 IST Report Abuse
Nethiadi பிராடு பையன் சார்.
Rate this:
Cancel
Kalyanaraman - Chennai,இந்தியா
08-ஜூலை-202000:39:28 IST Report Abuse
Kalyanaraman So what? யார் நிர்வகித்தாலென்ன, சரியாகச் செயல்படுகிறதா என்று மட்டுமே பார்க்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X