பொது செய்தி

இந்தியா

அத்தியாவசிய பட்டியலில் இருந்து முகக்கவசம், சானிடைசர் நீக்கம்

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Mask, hand sanitizer,essential commodities list, July 1,surplus availability

புதுடில்லி: கொரோனா பாதிப்பையடுத்து அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த (என்95 முகக்கவசம், சர்ஜிகல் மாஸ்க்)முகக்கவசம், கைகளை சுத்தப்படுத்தும் சானிடைசர் போன்றவற்றை, அத்தியாவசிய பட்டியலில் இருந்து நீக்கி மத்திய அரசு அறிவித்துள்ளது

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது, .முகக்கவசம், கைகளை சுத்தப்படுத்தும் சானிடைசர் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்துக்குள் கொண்டு வந்து கடந்த மார்ச் 13-ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது.


latest tamil news




இந்த வகைப் பொருட்களைப் பதுக்கினாலோ, விலையை அளவுக்கு அதிகமாக உயர்த்தி அறிவிப்பதோ சட்டப்படி குற்றமாகும் என அறிவித்திருந்தது. கடந்த ஜூன் 30-ம் தேதி வரை இந்தப் பொருட்கள் அனைத்தும் அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்தது.

இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பு 100 நாட்களைக் கடந்து 7 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில் தேவையான அளவு தற்போது இரு பொருட்களும் மக்களுக்கு கிடைப்பதால், அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955-பிரிவிலிருந்து இந்த இருபொருட்களும் நீக்கப்படுவதாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் லீனா நந்தன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
08-ஜூலை-202006:29:47 IST Report Abuse
Cheran Perumal உங்க தாய்நாட்டிற்குத் தான் லாபம். இப்போது மெதுவே வைரஸ் தடுப்பூசியை வெளியே விடச்சொல்லுங்க.அள்ளிக்கிட்டு போகலாம். அப்படியே கமிஷன் தொகையையும் கொஞ்சம் அதிகம் பண்ணச்சொன்னால் போச்சு.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
08-ஜூலை-202006:08:54 IST Report Abuse
Mani . V ஆமாம், அப்புறம் எப்படி கார்ப்பரேட்காரன் பிழைப்பதாம்? வெகு விரைவில் இந்த பட்டியலில் அரிசி, கோதுமை முதலியவைகளும் சேர்க்கப்படும். ஊ........ஊ.....
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-ஜூலை-202003:32:46 IST Report Abuse
J.V. Iyer ரயில் அறுவது கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்போது, இனி எதற்கு என்ஜின் என்று கழற்றி விட்டதுபோல இது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X