பொது செய்தி

தமிழ்நாடு

தென்மேற்கு பருவமழை தீவிரம்: நிரம்பியது அக்காமலை செக்டேம்

Added : ஜூலை 07, 2020
Share
Advertisement
 தென்மேற்கு பருவமழை தீவிரம்: நிரம்பியது அக்காமலை செக்டேம்

வால்பாறை:வால்பாறையில் தென்மேற்குப்பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் அக்காமலை செக்டேம் நிரம்பியது.வால்பாறையில் கடந்த ஜூன் மாதம், 1ம் தேதி முதல்தென்மேற்குப் பருவமழை துவங்கி, தொடர்ந்து பெய்கிறது. நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் இடைவிடாது பெய்த கனமழையினால், பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
அக்காமலை பகுதியில் பெய்யும் கனமழையால், வால்பாறை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும், அக்காமலை செக்டேம் நிரம்பியது. இதனால் வால்பாறை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மழையால், மேல்நீராறு அணையில் இருந்து வினாடிக்கு, 419 கனஅடி தண்ணீரும், கீழ்நீராறு அணையில் இருந்து, 48 கன அடி தண்ணீரும் சோலையாறு அணைக்கு திறந்து விடப்படுகிறது.இதனால், அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 90.86 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,062 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது.
அணையில் இருந்து வினாடிக்கு, 416 கனஅடி தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடப்படுகிறது.நேற்று காலை, 8:00 மணி வரை பெய்த மழையளவு விபரம் (மில்லி மீட்டரில்):சோலையாறு - 23, வால்பாறை - 25, மேல்நீராறு - 32, கீழ்நீராறு - 38, காடம்பாறை - 3, பரம்பிக்குளம் - 12, மணக்கடவு - 7, துணக்கடவு - 2, பெருவாரிப்பள்ளம் - 3, பொள்ளாச்சி - 13 என்ற அளவில் மழை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X