கொரோனாவுக்கு எதிரான போர்: மோடியின் கருத்தை சீண்டும் சிவசேனா

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
shiv sena, saamana, Modi, CoronaVirus, Covid 19, pm modi, corona crisis, Uddhav thackeray, சிவசேனா, மோடி, சாம்னா

மும்பை : 'கொரோனாவிற்கு எதிரான போர், 21 நாட்களில் முடிந்து விடும் என, பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் மாதம் கூறினார்; ஆனால், போர், 100 நாட்களை கடந்து விட்டது' என, சிவசேனா கூறியுள்ளது.

மஹா.,வில், முதல்வர், உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.


விமர்சனம்


இங்கு, சிவசேனாவின் கட்சி பத்திரிகையான, 'சாம்னா'வில், கொரோனா பரவல் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்கான விமர்சனத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: பொருளாதாரத்தில், வல்லரசாக மாறும் கனவில் உள்ள நம் நாட்டில், ஒரே நாளில், 25 ஆயிரம் பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப் படுவது துரதிர்ஷ்டவசமானது. வைரஸ் பாதிப்பில், நாம் ரஷ்யாவை முந்தியுள்ளோம். பாதிப்பு அதிகரிப்பது தொடர்ந்தால், முதலிடத்தை பெறுவோம்.

அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள், போலீசார், சுகாதார ஊழியர்கள் மற்றும் பிற துறைகளின் நிர்வாகிகள், வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, நாட்டிற்கும், மாநிலங்களுக்கும் சோதனையான காலகட்டம்.


போராட்டம்


மகாபாரத போர், 18 நாட்கள் நீடித்தது. ஆனால், 'கொரோனாவிற்கு எதிரான போரில், நாம், 21 நாட்களில் வெற்றி பெறுவோம்' என, பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை ஊட்டினார். ஆனால், இந்தப் போர், தற்போது, 100 நாட்களுக்கும் மேல் தொடர்வதால், போராட்டத்தில் பங்கேற்பவர்கள் சோர்வடைந்து உள்ளனர். எனவே, இந்த போராட்டம் மகாபாரதத்தை விட கடினமானது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஜூலை-202021:43:21 IST Report Abuse
ஆப்பு சொன்னவர் யாராவாவது இருக்கட்டும். சொல்லப்பட்டது உண்மைதானே... 15 லட்சம், நூறே நாளில் கருப்பு பணம், 2 கோடி வேலை வாய்ப்பு லிஸ்ட்டில் இதுவும்....
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
08-ஜூலை-202018:24:52 IST Report Abuse
sankaseshan உதவாக்கரைக்கு சுய புத்தியும் கிடையாது
Rate this:
Cancel
08-ஜூலை-202016:04:05 IST Report Abuse
P குமரவேல் உங்களை போல கையாலாகாத முதுகில் குத்தும் நபர்கள் உள்ள வரைக்கும் 21 நாட்கள் என்ன 21 மாதங்கள் ஆனாலும் கரோணா வைரஸை கட்டுப்படுத்தமுடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X