இந்தியாவுக்கு எதிரான நேபாளப் பிரதமரை காப்பாற்ற துடிக்கும் சீனா!

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement

காத்மாண்டு: நேபாள பிரதமர் கே.பி.ஒலியை பதவி நீக்கம் செய்ய அவரது கட்சி முடிவெடுத்துள்ள நிலையில், பிரதமரை காப்பாற்றும் முயற்சியாக நேபாளத்துக்கான சீன தூதர், நேபாள கம்யூனிச கட்சித் தலைவர்களை சந்தித்து அந்நாட்டு அரசியலில் மூக்கை நுழைத்துள்ளார்.



latest tamil news



இந்தியாவின் சில பகுதிகளை இணைத்து நேபாள பிரதமர் கே.பி.ஒலி புதிய வரைப்படம் தயாரிக்க உத்தரவிட்டார். அதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் பெறும் முயற்சியிலும் ஈடுபட்டார். இது தொடர்பான பாராளுமன்ற உரை மற்றும் பல கூட்டங்களில் இந்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் ஒலி பேசி வந்தார். இந்நிலையில் அவரை பதவி நீக்கம் செய்ய கட்சி முடிவெடுத்தது.

கட்சியின் நடவடிக்கைக்கு இந்தியாவின் சதியே காரணம் என வெளிப்படையாக குற்றம்சாட்டினார் கே.பி.ஒலி. அவரை பதவியில் இருந்து நீக்கியே ஆவது என முன்னாள் பிரதமர் பிரசன்டா தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நேபாளத்துக்கான சீன தூதர், ஹோ யாங்கி நேபாள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜாலா நாத் கனாலை அனுகியுள்ளார். நேபாள் குடியரசுக் கட்சித் தலைவர் பித்யா தேவி பண்டாரியையும் அவர் சந்தித்துள்ளார். ஆனால் பிரசன்டா அவரை சந்திக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


latest tamil news



இச்சந்திப்பு குறித்து சீன தூதரக செய்தித் தொடர்பாளர் அளித்திருக்கும் பேட்டியில், தூதரகம் நேபாளி தலைவர்களுடன் நல்ல உறவை பேணுகிறது. பொதுவான நோக்கத்தின் அடிப்படையில் பிரச்னைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளத் தயாராக உள்ளது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை சிக்கலில் விட விரும்பவில்லை. அதன் தலைவர்கள் வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என விரும்புவதாக கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-ஜூலை-202005:14:28 IST Report Abuse
J.V. Iyer இந்தியாவும் காயை நகர்த்த வேண்டியதுதானே? கஷ்டமா என்ன?
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
08-ஜூலை-202018:52:41 IST Report Abuse
Darmavan indiyavudan iruntha varai nanraaga irunthathu ippothu kettuvittathu nepaal.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
08-ஜூலை-202018:51:27 IST Report Abuse
Darmavan நேபாளத்தின் உள் விவகாரங்களில் தலையிட சீனா யார்?.உலகுக்கு நாட்டாண்மை செய்ய ஆசை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X