பொது செய்தி

இந்தியா

இந்தியா-சீனா எல்லையில் ரோந்து பணியில் இந்திய விமானங்கள்

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி : இந்தியா - சீனா எல்லையில், இந்திய விமானப் படை விமானங்கள், இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியா-சீனா ராணுவ கமாண்டர்கள் இடையே நடைபெற்ற பேச்சை தொடர்ந்து, லடாக்கில், கல்வான் பள்ளத்தாக்கில், சீனா அமைத்திருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டுள்ளன. அத்துடன், சீன ராணுவம், 2 கி.மீ., வரை பின் வாங்கியுள்ளது. இந்நிலையில், எல்லையில் எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க,
IAF, MiG29, fighter aircraft, Apache, helicopters, night patrolling, LAC, China, India, border crisis

புதுடில்லி : இந்தியா - சீனா எல்லையில், இந்திய விமானப் படை விமானங்கள், இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தியா-சீனா ராணுவ கமாண்டர்கள் இடையே நடைபெற்ற பேச்சை தொடர்ந்து, லடாக்கில், கல்வான் பள்ளத்தாக்கில், சீனா அமைத்திருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டுள்ளன. அத்துடன், சீன ராணுவம், 2 கி.மீ., வரை பின் வாங்கியுள்ளது.

இந்நிலையில், எல்லையில் எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, இந்தியாவின் 'அப்பாச்சி, மிக்-29' போர் விமானங்கள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இப்பணியின் போது எடுக்கப்பட்ட படங்களை, ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.


கண்காணிப்பு


இது குறித்து, இந்திய ராணுவக் குழு தலைவர், கேப்டன் ஏ.ரதி கூறியதாவது: இந்தியாவின் போர் விமானங்கள், முதன் முறையாக இரவு ரோந்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இது பலருக்கு வியப்பு அளிக்கலாம். இந்திய விமான படையினர், எத்தகைய சூழலையும் சமாளிக்கும் வகையில், நவீன ஆயுதங்கள் மற்றும் உத்திகளுடன், தயார் நிலையில் உள்ளனர்.

சீனா உடனான எல்லைக் கோடு நெடுகிலும், பல்வேறு இடங்களில், ஜெட் போர் விமானங்கள், எதிரிகளை தாக்கும் ஹெலிகாப்டர்கள், போக்குவரத்து வாகனங்கள் ஆகியவை கண்காணிப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளன. இங்கு மட்டுமின்றி, லே மற்றும் காஷ்மீர் எல்லையிலும், பல இடங்களில், 'சுகோய் 30 எம்.கே.ஐ., ஜகுவார், மிரேஜ் 2000' போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.


தயார் நிலை


போர் களத்திற்கு ராணுவ தளவாடங்களை கொண்டு செல்வதற்காக, அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள், சினுக் கனரக ஹெலிகாப்டர்கள் நிறுத்தப் பட்டுள்ளன.எத்தகைய சூழலையும் உடனடியாக எதிர்கொள்ளும் நோக்கில், நம் ராணுவம் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


கார்கில் வீரருக்கு நினைவஞ்சலி


கடந்த, 1999, ஜூலை, 7ல், கார்கில் போரில், வீர மரணம் அடைந்த 'கார்கில் வீரர்' விக்ரம் பத்ராவின், 21ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, இந்திய ராணுவத்தின் வடக்கு பிரிவு, 'டுவிட்டரில்' வீடியோ வெளியிட்டது. அதில், கார்கிலில், 4875வது முனையை பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து வெற்றிகரமாக மீட்டு, வீர மரணம் அடைந்த, கேப்டன் விக்ரம் பத்ரா மற்றும் தளபதி சஞ்சய் குமார் ஆகியோரின் தியாகத்திற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.SRINIVASAN - GUDUVANCHERI,இந்தியா
08-ஜூலை-202006:07:43 IST Report Abuse
T.SRINIVASAN கவலை வேண்டாம். இப்போதைய அரசு நேரு கால காங்கிரஸ் இல்லை. மோடி அவர்கள் 24 7 தேசிய வாதி. இப்போது சீனா வாலாட்ட முடியாது. மலேசியா மற்றும் நேபாள் அதிபர்களுக்கு நடந்தது சீனாவுக்கு நடக்கும்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
08-ஜூலை-202005:55:29 IST Report Abuse
தல புராணம் //சீனா உடனான எல்லைக் கோடு நெடுகிலும், ஜெட் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், போக்குவரத்து வாகனங்கள் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன. இங்கு மட்டுமின்றி, லே மற்றும் காஷ்மீர் எல்லையிலும், பல இடங்களில், 'சுகோய் 30 எம்.கே.ஐ., ஜகுவார், மிரேஜ் 2000' போர் விமானங்கள் வைக்கப்பட்டு உள்ளன. // கடகரேகை, மகரரேகை மட்டும் தரல்ல.. அதையாவது எதிரி கண்டுபிடிச்சிக்கட்டும் என்று விட்டார்களா? இல்லை நம்மை போல அவர்களும் வெளிநாட்டு சேட்டலைட் ( Planet Labs) தகவலை வைத்து அறிந்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார்களா ? ஆயிரம் சேட்டலைட்டு விட்டோம், இருந்தாலும் இலவச தகவல் தரும் Planet Labs தான் காய் கொடுக்குது நமது ராயணுவத்துக்கு.. ஸ்ஸ்ஸ் அப்பா..
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
08-ஜூலை-202004:12:19 IST Report Abuse
blocked user நம்மிடம் ஏறாளமான செயற்கைக்கோள்கள் இருக்கிறது. செயற்கை நுன்னரிவு தொழில் நுணுக்கத்தை வைத்து சீனனை ஒழித்துக்கட்டுவது எளிதாக முடியும். இஸ்ரேலுடன் கைகோர்க்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X