நான் உசுரோட இருக்கிறேன்பா! 'ஜன்னல்' கடைக்காரர் பேச்சு

Added : ஜூலை 07, 2020 | |
Advertisement
மயிலாப்பூர் மயிலாப்பூரில், பிரபலமான, ஜன்னல் கடை உரிமையாளர், கொரோனா தொற்றுக்கு பலியானதாக, பல்வேறு ஊடகங்களிலும் செய்தி வெளியான நிலையில், ''நான் நலமாக தான் உள்ளேன். தொற்றுக்கு பலியானது என் சகோதரர்,'' என, அவர் கூறியுள்ளார்.சென்னை, மயிலாப்பூர் பகுதியில், பிரத்யேக உணவு வகை, உணவு கூடங்கள், ஏராளமாக இருந்தாலும், பஜ்ஜி, போண்டா, கெட்டி சட்னிக்கு, 30 ஆண்டுகளாக பிரபலமானது, ஜன்னல்

மயிலாப்பூர் மயிலாப்பூரில், பிரபலமான, ஜன்னல் கடை உரிமையாளர், கொரோனா தொற்றுக்கு பலியானதாக, பல்வேறு ஊடகங்களிலும் செய்தி வெளியான நிலையில், ''நான் நலமாக தான் உள்ளேன். தொற்றுக்கு பலியானது என் சகோதரர்,'' என, அவர் கூறியுள்ளார்.சென்னை, மயிலாப்பூர் பகுதியில், பிரத்யேக உணவு வகை, உணவு கூடங்கள், ஏராளமாக இருந்தாலும், பஜ்ஜி, போண்டா, கெட்டி சட்னிக்கு, 30 ஆண்டுகளாக பிரபலமானது, ஜன்னல் கடை.கபாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ள பொன்னம்பல வாத்தியார் தெருவில், இந்த கடை உள்ளது.அதன் உரிமையாளர் சந்திரசேகரன். இவரது இளைய சகோதரர் சிவராமகிருஷ்ணன், 58; தேனாம்பேட்டையில் உள்ள, மத்திய கணக்காயர் அலுவலகத்தில், 'ஆடிட்டராக' பணியாற்றி வந்தார்.பணி நேரம் போக, தன் சகோதரர் கடையில், காலை, மாலை வேளைகளில், உதவி செய்து வந்தார்.நிமோனியா, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, 4ம் தேதி நள்ளிரவு, திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது.ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, 5ம் தேதி அதிகாலை உயிரிழந்தார்.அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவில், கொரோனா தொற்று உறுதியானது. தொடர்ந்து, அவரது உடலை, அன்று மாலை, மயிலாப்பூரில், சுகாதார துறையினர் நல்லடக்கம் செய்தனர்.இந்நிலையில், ஜன்னல் கடை உரிமையாளர், தொற்றுக்கு பலியானதாக, பல்வேறு ஊடகங்களிலும் நேற்று செய்தி வெளியாகி இருந்தது.இது குறித்து, ஜன்னல் கடை உரிமையாளர் சந்திரசேகரன் கூறுகையில், ''நான் நலமாக உள்ளேன். எனக்கு உறுதுணையாக இருந்த, என் சகோதரரின் மரணம், எங்கள் குடும்பத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விரைவில், இதில் இருந்து மீண்டு, ஒரு மாதத்திற்கு பின், கடை திறக்கப்படும்,'' என்றார்.ஏற்கனவே, சென்னை, மயிலாப்பூரில், சமையல் கலைஞர் செல்லப்பா, நெல்லை இருட்டுக்கடை அதிபர் ஹரிசிங் உள்ளிட்ட உணவு துறை பிரபலங்கள் கொரோனாவுக்கு பலியாகினர்.அவர்கள் வரிசையில், மயிலை ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளரின் சகோதரரின் இறப்பு, உணவு பிரியர்கள் வட்டாரத்தில், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X