ஆம்புலன்சை ஓட்டி சென்ற நடிகை ரோஜா செயலால் சர்ச்சை| Roja flayed for driving ambulance without mask | Dinamalar

ஆம்புலன்சை ஓட்டி சென்ற நடிகை ரோஜா செயலால் சர்ச்சை

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (11)
Share
Roja, actress roja, andhra pradesh, coronavirus

நகரி: ஆந்திராவில் தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் புதிதாக ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்த நடிகையும் எம்.எல்.ஏ.வுமான ரோஜா, புதிய ஆம்புலன்சை சிறிது தூரம் ஓட்டிச்சென்றார்.

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அவசர காலத்திற்காக 108 என்ற எண் கொண்ட புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் தொகுதி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நகரி தொகுதி ஓய்.எஸ்.ஆர்., காங்., கட்சி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா, கலந்து கொண்டு தேங்காய் உடைத்து பூஜை செய்து புதிய ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார்.
அப்போது ஆம்புலன்சை தானே சிறிது தூரம் ஓட்டிச்சென்றார்.


latest tamil news
ஆம்புலன்சை ரோஜா ஓட்டிச்செல்லும், வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.

நடிகை ரோஜாவின் இது போன்ற செயலால் பொது பயன்பாட்டிற்காக ஒப்படைக்க நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ்கள் பல மணி நேரம் காத்திருந்தன. ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X