பொது செய்தி

இந்தியா

சித்தா மருந்தை நோயாளிகளுக்குக் கொடுக்க உத்தரவு! தைரியமாக அறிவித்தார் புதுச்சேரி முதல்வர்

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
கொரோனா, நோய் தொற்று, சித்தா மருந்து, சிகிச்சை, புதுச்சேரி, அல்லோபதி, முதல்வர், நாராயணசாமி, அதிரடி, corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, coronavirus count, corona toll, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, worldwide crisis, Puducherry, puducherry cm, siddha medicine, corona treatment

புதுச்சேரி: தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதித்தோருக்கு, அலோபதியுடன், சித்தா மருந்தும் சேர்ந்த கூட்டு சிகிச்சை மற்றும் தனித்த சித்தா சிகிச்சை அளிக்கும் அரசின் முயற்சிக்கு, நல்ல பலன் கிடைத்து வருகிறது. இதையறிந்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மிக தைரியமாக முடிவெடுத்து, புதுச்சேரி முழுதும், கொரோனா நோயாளிகளுக்கு, சித்தா மருந்து கொடுக்கும்படி, மாநில சுகாதாரத் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 1.18 லட்சத்தை தாண்டியுள்ளது. சென்னையில், தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, 2,600க்கு மேல் சென்றது. சென்னையில் தாக்கம் குறையாத நிலையில், தமிழக அரசு அதிரடியாக, அலோபதி மருந்துடன், சித்தா மருந்தும் சேர்த்து, கூட்டு சிகிச்சையில் இறங்கியது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு, அலோபதி மருந்துடன், கபசுர குடிநீர் உள்ளிட்ட சித்த மருந்துகளும் வழங்கப்பட்டன.

பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், வீடு தேடிச் சென்று, கபசுர குடிநீர், மூலிகை தேநீர் ஆகியவை வழங்கப்பட்டன.அரசின் பரிந்துரையை ஏற்று, பொதுமக்களும் வீடுகளிலேயே மூலிகை கஷாயம், கப சுர குடிநீர் பருக துவங்கினர். இதனால், தொற்று பரவல்கட்டுக்குள் வந்தது.


அனுமதி:

தொற்றால் பாதிக்கப்பட்டோரின் விருப்பத்திற்கேற்ப, தனித்த சித்தா சிகிச்சை அளிக்கவும் அரசு அனுமதி அளித்தது. இதற்காக, சென்னை சாலிகிராமம், ஜவஹர் இன்ஜி னியரிங் கல்லுாரியில், தனித்த சித்தா சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டது. இந்த மையத்தில், வீரபாபு தலைமையிலான சித்தா டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. இதுவரை, 600 பேர் வரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்; 200க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை தொடர்கிறது.

அரசின் தொடர் முயற்சிகள் காரணமாக, சென்னையில், தினசரி தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2,600ல் இருந்து, படிப்படியாக குறைந்து, நேற்று, 1,250க்குள் வந்துள்ளது. மாநிலம் முழுதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 1.18 லட்சத்தை தாண்டினாலும், 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்; 46 ஆயிரம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இதுதவிர, தமிழகம் முழுதும், பரவலாக, சித்தா, ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில், சித்தா சிகிச்சைக்கு கிடைத்து வரும் பலன், படிப்படியாக பிற மாநிலங்களும் பின்பற்ற துவங்கியுள்ளன.


புதுச்சேரியில் அதிரடி:

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்திலும், கொரோனா நோயாளிகளுக்கு, சித்தா சிகிச்சை அளிக்கும்படி, அம்மாநில முதல்வர் நாராயணசாமி, தைரியமாக முடிவெடுத்து, சுகாதாரத் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, அவர் நேற்று அளித்த பேட்டி: தமிழகம் உட்பட, பல மாநிலங்களில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சித்தா சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும், 'ஆர்சனிக் ஆல்பம் - 30' மாத்திரைகள், புதுச்சேரியில் வீடுதோறும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. கபசுர குடிநீர் பருகுமாறு மக்களை அறிவுறுத்தி உள்ளோம்.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு, சித்தா முறையில் சிகிச்சை அளித்தால், விரைவில் குணமடைவர் என்பதை கருத்தில் கொண்டு, ஆயுஷ் நிறுவனம் அங்கீகரித்த மருந்துகளை கொடுக்க, சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் சித்த மருத்துவர்களை அழைத்து பேசினோம். கொரோனா நோயாளிகளுக்கு, எந்தெந்த சித்த மருந்துகள் கொடுக்க வேண்டும் என்ற, அறிவுரைப்படி செயல்படுமாறு கூறி உள்ளோம். சித்த மருத்துவர்களையும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, பயன்படுத்திக் கொள்ள உத்தரவிட்டுள்ளோம்.

சித்த மருந்தால், எவ்வித பக்க விளைவும் இருக்காது. நோயாளிகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதால், மக்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது.புதுச்சேரி, உழவர்கரை, பாகூர், வில்லியனுார் பகுதிகளுக்கு, நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமித்து, மருத்துவ மையங்கள், கட்டுப்பாட்டு மண்டலங்களை கண்காணிக்க கூறியுள்ளோம். கொரோனா தொற்றை தடுக்க, டாக்டர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு, நாராயணசாமி கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
09-ஜூலை-202008:36:29 IST Report Abuse
Bhaskaran நானாவுக்கு வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
N S Sankaran - Chennai,இந்தியா
08-ஜூலை-202022:35:13 IST Report Abuse
N S Sankaran சபாஷ் பாஞ்சு நாளில் கொரோனா புதுச்சேரியை விட்டு விடும்.
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
08-ஜூலை-202018:47:10 IST Report Abuse
mathimandhiri அது தான் அலோபதியில் கொரோனாவுக்கு மருந்து கிடையாது என்று அவர்களே ஒத்துக்கொள்கிறார்களே. சித்த மருந்துகள் ஒன்று குணப்படுத்தும். இல்லையேல் ஆளை கொன்று விடாது. கிட்டத்தட்ட நூறு சதவீதம் நோயை போக்குகிறது என்பது தான் கண்கூடாகத் தெரிகிறதே. மக்கள் உயிர் விலை மதிப்பற்றது அல்லவா. இவற்றையே முதன்மை மருத்துவமாக அறிவிப்பதில் என்ன தவறு. எதற்குத் தயங்க வேண்டும்? புதுவை முதல்வர் பாராட்டுக்குரியவர் தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X