அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா சமூக பரவல் இல்லை: முதல்வர் இ.பி.எஸ்., திட்டவட்டம்

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
Coronavirus, social spread, EPS, TamilNadu, CM, TN Corona Updates, TN Health, TN Fights Corona, Corona, TN Corona, TN Govt, coronavirus, Tamil Nadu, Covid 19, Stay Home

சென்னை : ''தமிழகத்தில், கொரோனா சமூக பரவலாக மாறவில்லை. சென்னையில் நோய் பரவல் குறைந்துள்ளது. மக்களின் வாழ்வாதாரம் கருதி, தொடர்ந்து ஊரடங்கை நீட்டிக்க முடியாது,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.

சென்னை, கிண்டியில், கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள, பிரத்யேக மருத்துவமனையை, முதல்வர், நேற்று திறந்து வைத்தார். பின், அவர் அளித்த பேட்டி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிறப்பான சிகிச்சை அளிக்க, பல்வேறு மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன.அந்த வகையில், கிண்டியில் பிரத்யேக மருத்துவமனை, 136.80 கோடி ரூபாயில், 750 படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டு உள்ளது.

இது, அனைத்து வசதிகள் உள்ள மருத்துவமனை. தமிழகம் முழுதும், அரசு மருத்துவ மனைகளில், 22 ஆயிரத்து, 615 படுக்கைகள்; தனியார் மருத்துவமனைகளில், 9,073 படுக்கைகள் உள்ளன.


சிறப்பு மையம்


சென்னையில், அரசு சார்பில், 7,895; தனியாரில், 5,549 படுக்கை வசதிகள் உள்ளன. கொரோனாவுக்கு, 314 மருத்துவமனைகளில், சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், மாநிலம் முழுதும், அரசு சார்பில், 516; தனியார் சார்பில், இரண்டு கொரோனா சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும், 47 சிறப்பு மையங்கள் உள்ளன.தமிழகத்தில் உள்ள சிறப்பு மையங்களில், 75 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில், 17 ஆயிரத்து, 500 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய், படிப்படியாக குறைந்து வருகிறது. அரசு எடுத்த நடவடிக்கைக்கு, பலன் கிடைத்துள்ளது. முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், நோய் தொற்று குறைந்துள்ளது. நோய் பரவலை தடுக்க, அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. எனினும், மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே, தடுக்க முடியும்.

தமிழகத்தில், சமூக பரவல் இல்லை. ஒருவருக்கு நோய் ஏற்பட்டால், அவருடன் தொடர்பிலிருந்தோரை கண்டறிந்து, பரிசோதனை நடத்தப்படுகிறது. புதிய வழிமுறைசென்னையில் காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது. இதன் வழியாக, நோய் அறிகுறி இருந்த, 10 ஆயிரம் பேர் கண்டறியப்பட்டு உள்ளனர்.

மாநகராட்சிகளில் வீடு வீடாக சென்று, நோய் அறிகுறி உள்ளதா என்பதை கண்டறிந்து, அறிகுறி இருந்தால், மருத்துவமனைக்கு அழைத்து சென்று, பரிசோதனை நடத்தப்படுகிறது. நோய் தொற்று இருந்தால், சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், நோய் பரவல் குறைக்கப்படுகிறது. வாழ்வாதாரம் மிகப் பெரிய சவால். ஒருபுறம் நோய் பரவலை தடுக்க வேண்டும். அதேநேரம், வாழ்வாதாரத்தை மக்களுக்கு அளிக்க வேண்டும். இது, அரசின் கடமை.

தொடர்ந்து ஊரடங்கு பிறப்பித்தால், வாழ்வாதாரம் பாதிக்கப்படும்; பொருளாதாரம் முடக்கப் படும். எனவே, முடிந்த அளவு ஊரடங்கு வழியே, நோய் பரவலை தடுத்து, மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க, அரசு முயற்சித்து வருகிறது. அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அரசு வழிகாட்டுதலை, மக்கள் கடைப்பிடித்தால், நோய் குறையும். வெளியில் செல்லும் போது, கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.

உலக சுகாதார நிறுவனம், மத்திய சுகாதார அமைச்சக வழிகாட்டுதலின்படி, அரசு செயல்படுகிறது. புதிய வழிமுறைகளை அறிவித்தால், அதையும் அரசு செயல்படுத்தி, நோயை கட்டுப்படுத்தும். மீண்டும் ஊரடங்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். மக்கள் விழிப்போடு இருந்து, அரசின் வழிமுறைகளை பின்பற்றினால், நோய் படிப்படியாக குறைந்து, இயல்புநிலை திரும்ப வாய்ப்பு இருக்கிறது. அரசு அறிவிக்கிற வழிமுறைகளை, பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு, முதல்வர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Kettavan - Madurai,இந்தியா
08-ஜூலை-202018:40:33 IST Report Abuse
Nallavan Kettavan தொளபதி is in UK London for ... treatment
Rate this:
Cancel
Kadaparai Mani - chennai,இந்தியா
08-ஜூலை-202015:48:24 IST Report Abuse
Kadaparai Mani சென்னை கிண்டியில் ரூ.127 கோடி மதிப்பிலான கொரோனா சிறப்பு மையத்தை திறந்து வைத்து முதல்வர் இபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தலைப்பு இப்படித்தான் இருக்கத்தான் வேண்டும்
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
08-ஜூலை-202015:32:38 IST Report Abuse
Visu Iyer சமூக பரவல் இல்லை என்றால் ஏன் திருக்கோயில்களை திறக்க வில்லை.. அவுங்க சொன்னால் வரும்.. அவுங்க சொன்னால் போகும்.. நல்ல இருக்கு இந்த கொரானா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X