பரிதாபாத்தில் விகாஷ் துபே பதுங்கல்?: போலீஸ் வருவதற்குள் 'எஸ்கேப்'

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
லக்னோ : உ.பி.,யில் கான்பூர் அருகே, கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஷ் துபேயை பிடிக்கச் சென்ற போலீசார் மீது, ரவுடி கும்பல், சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. இதில், ஒரு டி.எஸ்.பி., மூன்று எஸ்.ஐ.,க்கள் உட்பட, எட்டு போலீசார் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஏழு போலீசார் படுகாயம் அடைந்தனர்.தலைமறைவாக உள்ள ரவுடி விகாஷ் துபேயை பிடிக்க, தனிப்படை போலீசார் தேடுதல்
Vikas Dubey, uttar pradesh, UP cops

லக்னோ : உ.பி.,யில் கான்பூர் அருகே, கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஷ் துபேயை பிடிக்கச் சென்ற போலீசார் மீது, ரவுடி கும்பல், சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. இதில், ஒரு டி.எஸ்.பி., மூன்று எஸ்.ஐ.,க்கள் உட்பட, எட்டு போலீசார் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஏழு போலீசார் படுகாயம் அடைந்தனர்.

தலைமறைவாக உள்ள ரவுடி விகாஷ் துபேயை பிடிக்க, தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை துவக்கியுள்ளனர். ரவுடி விகாஷ் துபேயை பற்றி தகவல் தெரிவிப்போருக்கு பரிசு தொகை ரூ. 2.50 லட்சம் அறிவித்துள்ளனர்


latest tamil news
இந்நிலையில் ரவுடி விகாஷ் துபே அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள சொகுசு ஹோட்டலில் பதுங்கியிருப்பது சி.சி.டி.வி. காட்சி பதிவுகள் மூலம் தெரியவந்தது. விகாஷ் துபே , கறுப்பு நிற டி.சர்ட், நீலநிற ஜீன்ஸ் அணிந்து , முகக்கவசத்துடன் நின்றிருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. உடன் அங்கு மாறுவேடத்தில் சென்ற போலீசார் விகாஷ் துபேயை பிடிக்க முயற்சித்தனர். அதற்குள் அவன் தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bigu -  ( Posted via: Dinamalar Android App )
08-ஜூலை-202007:17:11 IST Report Abuse
bigu இவன் ரவுடி மாதிரியே தெரியல. இவன் ஒரு ஆளுன்னு இவனை புடிக்கவே முடியலங்கறதே நெனச்சா அரசின் கையலாததனம் தான். 8 அரசு காவல்துறை அதிகாரிகளை கொன்ற ஒரு ரவுடி என்று கூறி கொண்டு தலைமறைவாக திரியும் புடிக்க முடியவில்லை என்றால் என்னதான் இவர்கள் ஆட்சி செய்கின்றார்கள்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
09-ஜூலை-202005:26:32 IST Report Abuse
 Muruga Velதுப்பாக்கி எடுக்காம தமிழ்நாட்டுல ஒரு குடும்பம் என்ன பாடு படுத்துது .....
Rate this:
Cancel
Rajinikanth - Chennai,இந்தியா
08-ஜூலை-202007:04:51 IST Report Abuse
Rajinikanth எவ்வளவு பெரிய கொடூரத்தை அரங்கேற்றிவிட்டு கூலாக சுற்றிக்கொண்டு இருக்கிறான் அவன் ..அதுவும் சொகுசு ஓட்டல்களில் எல்லாம் தங்கி இருந்தபடி கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு இருக்கிறான் ..போலீசை எதிர்த்து பேசினார்கள் என்ற ஒரே காரணத்துக்காக தகப்பன் மகன் என இருவரை அள்ளிக்கொண்டு சென்று விடிய விடிய காவல் நிலையத்தில் வைத்து அடித்து அவர்களின் கதையையே முடித்த போலீசுக்கு தனது துறையிலிருந்த எட்டு காவலர்களை ஈவு இரக்கமின்றி கொன்றவனை பிடிக்க முடியவில்லையா அல்லது அங்கு தமிழகம் போல வசதி வாய்ப்புகள் இல்லையா ..இந்நேரம் பிடித்து அவனது கதையை முடித்திருக்க வேண்டாமோ ..?
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
08-ஜூலை-202005:51:29 IST Report Abuse
 Muruga Vel ஓட்டல் அதிபர் பாவம் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X