பொது செய்தி

தமிழ்நாடு

சி.பி.எஸ்.இ., பாடத்தில் 30% குறைப்பு; 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அமல்

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
CBSE, reduce, syllabus, class 9, class 12, Coronavirus pandemic, corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, coronavirus count, corona toll, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, worldwide crisis

சென்னை : கொரோனா நெருக்கடி நிலை காரணமாக சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சி.பி.எஸ்.இ. அகாடமிக் இயக்குனர் ஜோசப் இம்மானுவேல் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுகாதார ரீதியான அவசர நிலை உள்ளது. கொரோனா நோய் தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன; நேரடி வகுப்புகள் நடத்தப்படவில்லை. எனவே நடப்பு கல்வி ஆண்டில் ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பாட திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது.

இதுகுறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள கமிட்டியும் நிர்வாக கமிட்டி மற்றும் பாட திட்ட கமிட்டியும் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் நெருக்கடியான சூழலை கருத்தில் கொண்டு பாட திட்டத்தில் மாற்றங்கள் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மாணவர்களுக்கு தேவையான முக்கிய பாடங்கள் முதன்மையான அம்சங்கள் பாதிக்காத வகையில் இந்த மாற்றங்கள் இருக்கும். பள்ளி தலைமை நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பாட திட்ட குறைப்பு தொடர்பாக மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். குறைக்கப்படும் பாடத் திட்டம் பள்ளிகளின் அக மதிப்பீடு ஆண்டின் இறுதி பொது தேர்வு ஆகியவற்றில் இடம் பெறாது.

அதேபோல வகுப்புகள் நடத்தப்படும் நாட்களுக்கான அகாடமிக் காலண்டர் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் புதிதாக தயார் செய்யப்பட்டுள்ளது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய அகாடமிக் காலண்டரை பின்பற்ற வேண்டும். குறைக்கப்பட்ட பாட திட்ட விபரங்கள் சி.பி.எஸ்.இ.யின் இணையதளத்தில் தரப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பாட திட்ட குறைப்பு குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நடப்பு கல்வி ஆண்டில் பாட திட்ட குறைப்பு தொடர்பாக கல்வியாளர்கள் மற்றும் பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன; 1500க்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்தனர். கல்வியாளர்கள் பலரும் கருத்துகளை பதிவு செய்தனர்.

அதன்படி நடப்பு கல்வி ஆண்டின் சூழலை கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் 30 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கையில் மாணவர்களுக்கு தேவையான முக்கிய அம்சங்கள் அடிப்படை பாடங்கள் குறைக்கப்படாமல் பார்த்துக் கொள்ளப்படும்.இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
08-ஜூலை-202010:20:05 IST Report Abuse
R.Kumaresan இந்தியா தமிழ்நாட்டில் CBSE CBSC பள்ளிக்கூடங்கள் மற்றும் மற்ற பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு படிப்பது மாதிரி வீட்டிலிருந்தே படிப்பது இருக்காது... இந்தியா தமிழ்நாட்டில் வீட்டிலிருந்தே படித்தால் நன்றாக தூங்கவைத்துக்கொண்டிருந்தாலும் தூங்க வைத்துக் கொண்டிருப்பார்கள்..
Rate this:
Cancel
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
08-ஜூலை-202002:36:22 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை நூறு பர்சன்ட் படிச்சப்பவே பல பேர் பக்தாள்ஸ்சா இருக்காங்க இப்ப அரை குறையா படிச்சா நாட்டின் நிலைமை என்ன ஆகும் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X