பொருளாதார வளர்ச்சி: நிடி ஆயோக் உறுதி| Green shoots visible, India will bounce back: NITI Aayog CEO | Dinamalar

பொது செய்தி

இந்தியா

பொருளாதார வளர்ச்சி: 'நிடி ஆயோக்' உறுதி

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (1)
Share

புதுடில்லி: 'கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் தெரிகிறது' என 'நிடி ஆயோக்' அமைப்பு தெரிவித்துள்ளது.latest tamil news


நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறியதாவது: கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்திய ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முக்கியமான துறைகள் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளன. பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. அதனால் நாடு நிச்சயம் பொருளாதார வளர்ச்சியை அடையும்.


latest tamil newsஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் கடந்த ஏப்ரலில் 32 ஆயிரத்து 294 கோடியாக இருந்தது. இது மே மாதத்தில் 62 ஆயிரத்து 9 கோடி ரூபாயாகவும் ஜூன் மாதத்தில் 90 ஆயிரத்து 917 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா நெருக்கடியை சிறந்த வாய்ப்பாக மாற்றி முன்னேறும் திறமை இந்தியாவுக்கு உள்ளது. வளர்ச்சி அதிகம் உள்ள துறைகளை கண்டறிந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.இவ்வாறு கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X