சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சமூக வலைதளத்தில்,அவதூறு பேச்சு: நடிகை வனிதா புகார்

Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
 சமூக வலைதளத்தில்,அவதூறு பேச்சு:  நடிகை வனிதா புகார்

போரூர் : சமூக வலைதளத்தில், தன்னை அவதுாறாக பேசிய பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நடிகை வனிதா விஜயகுமார், போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா,சந்திரலேகா படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடித்து,தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவர், தற்போது, போரூர் அடுத்த அய்யப்பன் தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, போரூர் காவல் நிலையத்தில், வனிதா புகார் மனு ஒன்று அளித்தார்.அதில், 'சமூக வலைதளத்தில், சூர்யா தேவி என்ற பெண், தன்னை அவதுாறாக பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

போரூர் போலீசார் விசாரிக்கின்றனர். கடந்த மாதம் வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.பீட்டர் பாலின் முதல் மனைவி, தனக்கு தெரியாமல் திருமணம் செய்ததாக, அவர் மீது, வடபழநி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
12-ஜூலை-202017:43:39 IST Report Abuse
Endrum Indian தயவு செய்து இவளை பற்றிய செய்தியை தினமலரில் பிரசுரிக்கவேண்டாம் அந்த பக்கத்தை புரட்டவே அசிங்கமாக இருக்கின்றது
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
11-ஜூலை-202018:41:14 IST Report Abuse
S. Narayanan நல்ல விஷயங்களை பார்க்கலாம் என்று சமூக வலை தளத்தை பார்த்தால்.......... சேச்சே
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
11-ஜூலை-202009:51:26 IST Report Abuse
Bhaskaran தயவுசெய்து இவளைப்பற்றிய செய்திகளை ஊடகங்கள் தவிர்க்கணும் .ஒழுக்கக்கேட்டை மலிவாக்கும் இம்மாதிரிப்பிறவிகளை புறக்கணிக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X