சென்னை: தமிழகத்தில் சமையல் காஸ் இணைப்பை 100 சதவீத வீடுகளும் பெறும் இலக்கை எட்ட எண்ணெய் நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன.
நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் சமையல் காஸ் இணைப்பு வழங்கும் நோக்கில் ஏழைகளின் வீடுகளுக்கு இணைப்பு வழங்க மத்திய அரசு 'உஜ்வாலா' திட்டத்தை 2016ல் நடைமுறைப்படுத்தியது. அப்போதைய நிலவரப்படி தமிழகத்தில் சமையல் காஸ் இணைப்பை 1.61 கோடி வாடிக்கையாளர்கள் பெற்றிருந்தனர்.
அதிகாரிகள் கூறியதாவது: ஜ்வாலா திட்டம் துவங்கப்பட்டது முதல் சமையல் காஸ் இணைப்பு எண்ணிக்கை ஆண்டுக்கு ஒன்பது லட்சம் என்ற வீதத்தில் அதிகரித்தது. 2019 பிப். நிலவரப்படி தமிழகத்தில் சமையல் காஸ் இணைப்பு பெற்றவர்கள் எண்ணிக்கை 2.02 கோடியாக இருந்தது; இது 98 சதவீதம்.அனைத்து வீடுகளிலும் சமையல் காஸ் இணைப்பு என்ற 100 சதவீத இலக்கை இமாச்சல பிரதேச மாநிலம் சமீபத்தில் எட்டியுள்ளது. தமிழகமும் இந்த இலக்கை எட்டுவதற்காக எண்ணெய் நிறுவன முகமைகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE