பொது செய்தி

இந்தியா

'பானி பூரி ஏடிஎம்': இளைஞர் சாதனை

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

ஆமதாபாத்: கொரோனா பரவல் பயமின்றி பானி பூரி சாப்பிட, 'பானி பூரி ஏடிஎம்' தயாரித்த இந்தியரின் படைப்பு சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.



latest tamil news



இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் சாலையோரம் அதிகம் விற்கப்படும் பானிபூரியை அதிகம் விரும்பி சாப்பிடும் பலரும், யூடியூப் பார்த்து வீட்டில் தயாரித்து உண்ண ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில், கொரோனா பயமின்றி பானிபூரி சாப்பிட, இந்தியர் ஒருவர் மிஷின் ஒன்றை தயாரித்துள்ளார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்த இளைஞரான பாரத்பாய் விகாபாய் பிரஜாபதி, இந்த 'பானி பூரி ஏடிஎம்'மை தயாரித்துள்ளார்.


latest tamil news



இந்த மிஷினில், ரூ.20 நோட்டை உள்ளே செலுத்தினால், கன்வேயர் பெல்டில், பூரியுடன் பானி, உருளைக்கிழங்கு சேர்த்த கலவை, ஒன்றன் பின் ஒன்றாக வருகிறது. இதனை அப்படியே எடுத்து சாப்பிடலாம். கொரோனா பரவலைத் தடுக்கவும், மக்கள் பயமின்றி பானி பூரி சாப்பிடவும் இந்த மிஷினை, பிரஜாபதி கண்டுபிடித்துள்ளார்.

பிரஜாபதியின் இந்த கண்டுபிடிப்பும், அவரது மிஷின் எவ்வாறு செயல்படுகிறது என்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
09-ஜூலை-202008:12:41 IST Report Abuse
Sampath Kumar இது மாதரி பக்கோடா புரோட்டா வாடா பாவு பஜ்ஜி சொஜ்ஜி என்று கண்டு பித்தத்தால் தானே நாடு ??/ முன்னேறும் தின்னி pandarankala
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
08-ஜூலை-202011:15:40 IST Report Abuse
Girija பாணி பூரி பெல் பூரி உணவுவகைகளினால் கொரோனா தொற்று அபாயம் அதிகம் உடனே தடை செய்யவேண்டும் .
Rate this:
Cancel
k.sampath - Trichy,இந்தியா
08-ஜூலை-202008:06:30 IST Report Abuse
k.sampath இது போன்ற அறிவியல் படைப்புகளை ஊக்குவிக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X