பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பிடியிலிருந்து வெகுவாக மீண்டு வரும் சென்னை

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement

சென்னை:தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4,545 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை 71,116 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.



latest tamil news



தமிழகத்தில் இன்று தான் மிகப்பெரிய அளவில் ஒரே நாளில் 4500க்கும் மேற்பட்டோர் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் தற்போதைய நிலையில் 45,839 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.சென்னையில் 1203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 71,230 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news


தற்போதைய நிலையில் 22374 பேர் சென்னையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுகிறார்கள். பல்லாயிரம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர். சென்னையில் நேற்று மட்டும் 2,853 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். விரைவில் சென்னை கொரோனாவில் இருந்து மீண்டுவிட வாய்ப்பு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rengaraj - Madurai,இந்தியா
08-ஜூலை-202013:44:51 IST Report Abuse
Rengaraj மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் பரவல் என்பது தவிர்க்கமுடியாது. மக்கள் அதை உணர்ந்து செயல்படவேண்டும். முகக்கவசம், சமூக இடைவெளி என்பது மந்திர சொற்கள். . அவற்றை எப்போதும் மறக்காமல் கடைபிடிக்கவேண்டும். இந்த விஷயத்தில் அரசாங்கம் ஒரு அளவுக்குத்தான் நமக்கு உதவி செய்யும். நம்மை நாம் தான் காத்துக்கொள்ள வேண்டும். அரசை குற்றம் சொல்லி காலத்தை வீண்செய்ய இயலாது. அரசாங்கம் ஊரடங்கு என்று நம்மை தற்காத்துக்கொள்ள அவகாசம் அளித்தது. அதை நாம் வீணடித்து விட்டோம் என்றால் அது மிகையல்ல. பொருளாதாரம், கல்வி என்பனவற்றை நாம் புறம் தள்ள முடியாது. ஆனால் அனைவரையும் பட்டினி போட இயலாது என்பதற்காகத்தான் தளர்வு என்று ஒரு சலுகை அளித்தது. ஜனநாயக நாட்டில் இங்கே இரும்புக்கரம் கொண்டு ஒட்டுமொத்தமாக எல்லோரையும் அடக்க முடியாது. அந்த சலுகை இங்கே தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. அரசாங்கம் பலவகையில் விமர்சிக்கப்பட்டது. அந்த சாரார் , இந்த சாரார் , அவருக்கு ஒரு சலுகை, எனக்கு ஏன் இல்லை என்பதாக நிறைய கண்டனங்கள். ஜனநாயக நாட்டில் இது தவிர்க்க முடியாது. அவரவர் வாதங்கள் அவரவர்க்கு சரி என்று தோன்றியது. விளைவு அதிக எண்ணிக்கையில் பாதிப்பு. இன்று சென்னையினுள் பழையபடி கூட்டம் அதிகரிக்கும். நோய்த்தொற்றும் பரவலாம். நமக்கு நாமே எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். அரசை குற்றம் சொல்வதில் எந்த பயனும் இல்லை.
Rate this:
Cancel
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
08-ஜூலை-202012:49:23 IST Report Abuse
Sathyanarayanan Bhimarao 'பிடி' யிலிருந்து விடுபட்டதா? 'பீதி'யிலிருந்து விடப்பட்டதா?
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
08-ஜூலை-202012:20:50 IST Report Abuse
Bhaskaran இதே மருத்துவம் தொடர்ந்தால் இன்னும் சில நாட்களில் கண்டிப்பாக நாம் மீள்வது உறுதி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X