மும்பை: அம்பேத்கர் வீடு மர்மநபர்களால் சேதம்

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

மும்பை: மும்பையில் அம்பேத்கர் வசித்த வீட்டை மர்மநபர்கள் சேதப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாநில உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: அம்பேத்கரின் வீடு மும்பையின் தாதர் பகுதியில் ஹிந்து காலனியில் அமைந்துள்ளது. அவரது வீடு ராஜ்க்ருஹா என அழைக்கப்படுகிறது. அம்பேத்கர் 1930 ம் ஆண்டில் மும்பையில் குடியேறிய போது ராஜ்க்ருஹா கட்டப்பட்டது.மூன்று தளம் கொண்ட இந்த வீட்டில் தரை தளம் அம்பேத்கரின் தனிப்பட்ட உடமைகளை கொண்டிருக்கும் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. ஒருதளம் அம்பேத்கரின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

நேற்று (7 ம் தேதி) அடையாளம் தெரியாத மர்மநபர்கள் வீட்டின் முகப்பு பகுதியில் இருந்த பூந்தொட்டிகளை தள்ளிவிட்டு சேதப்படுத்தி உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து போலீஸ் விசாரணைக்கு மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உத்தரவிட்டார். தொடர்ந்து அவர் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:தாதரில் உள்ள அம்பேத்கரின் இல்லமான ' ராஜ்க்ரூ 'வி ல் அடையாளம் தெரியாத சில நபர்கள் நடத்திய தாக்குதல் கண்டிக்கத் தக்கது. போலீசார் இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருகின்றனர், மேலும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவிட்டு உள்ளார்.


latest tamil news



மேலும் வஞ்சித் பகுஜன் அகாதி கட்சியின் தலைவரும், அம்பேத்கரின் பேரனுமான பிரகாஷ் அம்பேத்கரும் அமைதிக்காக வேண்டுகோள் விடுத்தார். அவர் கூறி இருப்பதாவது: மர்மநபர்கள் சி.சி.டி.வி கேமராவையும் பிற விஷயங்களையும் அழிக்க முயன்றனர் என்பது உண்மைதான்.அனைத்து உயர் அதிகாரிகளும் ஏற்கனவே வந்து விசாரிக்கின்றனர்.ஆகவே, அனைவரும் அமைதியைக் காக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்தொடர்ந்து வீட்டிற்கு வெளியே மக்கள் கூட்டமாக கூடிவருவதைத் தவிர்த்து தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murthy - Bangalore,இந்தியா
08-ஜூலை-202013:38:22 IST Report Abuse
Murthy அம்பேத்காருக்கு கொடுக்கும் மரியாதையை இதுதான். இவர்களுக்கு ஒரே கொள்கைதான், ஹிந்துத்துவா....
Rate this:
Cancel
kannan - Chennai,இந்தியா
08-ஜூலை-202009:02:48 IST Report Abuse
kannan இதெல்லாம் மக்களை திசை திருப்பும் வேலை . இந்த மாதிரி எல்லாம் செய்தால் அவரின் புகழுக்கு களங்கம் வந்துவிடாது . வாழும்போது அவர் பார்க்காத பிரச்சனைகலா ...
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
08-ஜூலை-202008:49:17 IST Report Abuse
Balasubramanian Ramanathan இன்று மாலைக்குள் சிவசேனாவுக்கு ஒருதோழமை சுடல் வரலாம். எச்சரிக்கையாக இருங்கள். புயல் எல்லையை கடக்குமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X