உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
White House, trump, who, USA

வாஷிங்டன்: உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரி்க்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO ) சீனா சார்பு நிலையில் உள்ளதால் அந்த அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக்கொள்வதாக கடந்த மே மாதம் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். அந்த அமைப்புக்கு வழங்கி வரும் நிதி நிரந்தரமாக நிறுத்தப்படும் எனவும் அமெரிக்கா இந்த அமைப்பில் இருந்து வெளியேறும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கிவந்த பல மில்லியன் டாலர்கள் நிதியை நிறுத்தினார்.


latest tamil news




இந்நிலையில், உலக சுகாதார அமைப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா வெளியேறியுள்ளது.

இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலர் அன்ட்டோனியோ குட்டரசிற்கு கடந்த 6-ம் தேதி அனுப்பிய கடிதத்ததில் கூறியுள்ளதாவது:உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறிவிட்டது. ஐ.நா.வின் நடைமுறைப்படி 2021 ஆம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி ( 1 ஆண்டுகள்) தான் வெளியேற்ற நடைமுறை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் .இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.



Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumzi - trichy,இந்தியா
08-ஜூலை-202013:20:51 IST Report Abuse
kumzi உனக்கும் அறிவுக்கும் சம்பந்தமே இல்லனு சொல்லுறாங்க
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
08-ஜூலை-202012:33:27 IST Report Abuse
ponssasi அமெரிக்காவிற்கு முன் இந்தியா இந்த முடிவை எடுத்திருக்கவேன்டும், இப்போது ஒன்றும் காலம் கடந்துவிடவில்லை இந்தியாவும் வெளியேற்ற அறிவிப்பை வெளியிடவேண்டும்
Rate this:
Cancel
08-ஜூலை-202010:18:24 IST Report Abuse
ஆப்பு இது ஒரு வியாபார ரீதியான முடிவு. கொரோனாவுக்கு மருந்து அமெரிக்காதான் கண்டுபிடிக்கும்னு ட்ரம்ப் நினைக்கிறார். WHO ல இருந்தா மருந்தை உலக நாடுகளுக்கு குறைந்த விலையில் குடுக்க வேண்டிய கட்டாயம். இப்போ விலகிட்டதால நட்புநாடுகளுக்கு நல்ல விலைக்கு குடுக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X