பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பு குழு தலைவர் ககன்தீப் கங் ராஜினாமா

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Gagandeep Kang, coronavirus vaccine, covid 19, coronavirus, கொரோனா, தடுப்பு குழு, தலைவர், ககன்தீப் கங்,   ராஜினாமா

பரிதாபாத்: அரியானா மாநிலம் பரிதாபாதில் சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (டி.எச்.எஸ்.டி.ஐ.,) செயல் இயக்குனர் ககன்தீப் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனத்தின் செயல் இயக்குனராக மருத்துவ ஆராய்ச்சியாளர் ககன்தீப் கங் செயல்பட்டார். இவர் தலைமையிலான குழு கொரோனா தொற்றுக்கான நோய்தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.இந்நிலையில் ககன்தீப்ப கங் தனது பொறுப்பை நேற்று ராஜினாமா செய்தார். ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் பணியில் இருந்து விடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.


latest tamil newsவேலுார் சி.எம்.சி., கல்லுாரியில் இரைப்பை, குடல் அறிவியல் பிரிவு பேராசிரியராக இருந்த ககன்தீப், 2016ம் ஆண்டு பரிடாபாத் சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன செயல் இயக்குனராக நியமிக்கப்பட்டார். இவருடைய பதவிக்காலம் முடிய ஒரு ஆண்டு உள்ள நிலையில் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்து கண்டுப்பிடிப்பில் ஐ தராபாத்தில் செயல்படும் 'பாரத் பயோடெக்' நிறுவனம் 'கோவேக்சின்' என்ற கொரோனா தடுப்பூசியை கண்டுப்பிடித்துள்ளது. இந்த தடுப்பூசியை ஆகஸ்டு 15ல் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் ககன்தீப்பின் ராஜினாமா முடிவு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

ராஜினாமா குறித்து அவர் கூறுகையில், 'சொந்த காரணத்துக்காக பொறுப்பை ராஜினாமா செய்துள்ளேன்' என்றார். இவர் லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siriyaar - avinashi,இந்தியா
08-ஜூலை-202006:57:49 IST Report Abuse
siriyaar இந்தியா இன்னும் சுதந்திர நாடு மாதிரி தெரியலை, சீனாக்கு பிரச்சினைன்னா காங்கிரஸ் அவரது. லோன் வாங்கி ஏமத்திட்டு லண்டன் போயிடறான், சித்த மருந்து வித்தா ஜெயிலில் போடறாங்க. பாகிஸ்தான் ஜிந்தாபாத்னு ஒரு கூட்டம் ஆடுது. போப் சொல்லறாப்லதான் ஒரு கூட்டம் கேட்டுது. கான்டராக்ட் போட்டு அடிமையாக வைச்சிருக்காங்களோ. மருந்து கண்டுபிடிச்சாச்சுன்னா இங்கிலாந்துல சேர்த்துகிறாங்க, ரிசர்வ் வங்கி கவர்னர் எல்லாம் உலக வங்கியின் ஆட்கள்தான் வர்றாங்க பின்னாடி அங்கயே போறாங்க, நோபல் பரிசு வாங்கிறவன் எல்லாம் பிரதமரை குறை கூறுவதே வேலையா செய்யறான்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
08-ஜூலை-202005:04:21 IST Report Abuse
தல புராணம் எவ்வளவு நாட்கள் தான் அரசியல்வாதிகளின் பொய்யை சொல்லிக்கொண்டிருக்க முடியும் ஒருத்தரால்? போங்கடா, நீங்களும் உங்க போஸ்ட்டும்ன்னு சொல்லிட்டு வந்துட்டார் போல.. ஆகஸ்டு வரைக்கும் தாக்கு பிடிக்கணும்.. பத்து லட்சத்தை எட்டியிருப்போம் அந்நேரம்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
08-ஜூலை-202005:39:14 IST Report Abuse
 Muruga VelPlease eat two bananas before going to bed. Morning you will be comfor and not feel depressed....
Rate this:
Srini - ,
08-ஜூலை-202006:57:57 IST Report Abuse
SriniMr Muruga your replay is awesome...
Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
08-ஜூலை-202008:48:45 IST Report Abuse
Cheran Perumalஇவரது ஆராய்சி குறிப்புக்களை சி எம் சி யுடன் பகிர்ந்து கொண்டதாக தகவல் வந்ததை அடுத்து அதை வெளிப்படுத்தி இவருக்கு தர்ம சங்கடத்தை கொடுக்கவேண்டாம் என்று வேறொரு குழுவை ஏற்படுத்தியதாக தகவல். அம்மணியின் உள்குத்து வெளிப்பட்டு விடுமோ என்று ராஜினாமா நாடகம்.இதற்கு உண்டியல் பார்ட்டிகள் பொங்குவது அந்த தகவலை உறுதிப்படுத்துகிறது....
Rate this:
Anand - chennai,இந்தியா
08-ஜூலை-202011:42:34 IST Report Abuse
AnandCheran Perumal - you are right......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X