கொரோனா போல பல வியாதிகள் உருவாகும்: ஐநா எச்சரிக்கை

Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
நியூயார்க்: பிராணிகளிடம் இருந்து மனிதருக்கு நோய்கள் பரவுவதை கட்டுப்படுத்த சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனில், கொரோனா போல பல வியாதிகள் உருவாகும் என ஐ.நா., சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவு தலைவர், மார்டன் கப்பிலி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த, 1919ல், 'ஸ்வைன் ப்ளு' வந்து மனித உயிர்களை பறித்தது. 100 ஆண்டுகள் கழித்து, தற்போது கொரோனா பாதிப்பு

நியூயார்க்: பிராணிகளிடம் இருந்து மனிதருக்கு நோய்கள் பரவுவதை கட்டுப்படுத்த சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனில், கொரோனா போல பல வியாதிகள் உருவாகும் என ஐ.நா., சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவு தலைவர், மார்டன் கப்பிலி தெரிவித்துள்ளார்.latest tamil newsஇதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த, 1919ல், 'ஸ்வைன் ப்ளு' வந்து மனித உயிர்களை பறித்தது. 100 ஆண்டுகள் கழித்து, தற்போது கொரோனா பாதிப்பு வந்துள்ளது. இடையில் பல வைரஸ் தாக்குதல்களை உலகம் கண்டுள்ளது.

கடந்த, 1996ல், 'பேர்டு ப்ளு' எனப்படும், பறவைக் காய்ச்சல் வந்தது. 1998ல், 'நிபா' வைரஸ்; 2003ல், 'சார்ஸ்' நோய்; 2016ல், 'சாட்ஸ்' தொற்று ஆகிய அனைத்தும், சீனாவின் குவாங்டங் மாகாணத்தில் இருந்து தான் தோன்றின. அங்கு பிராணிகளிடம் இருந்து, மனிதர்களுக்கு வைரஸ் தொற்றி உள்ளது. கொரோனாவும், பிராணிகளிடம் இருந்து தான் மனிதருக்கு பரவி உள்ளது.


latest tamil newsஇத்தகைய பரவலை கட்டுப்படுத்த, உலக நாடுகள் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், கொரோனா போல, பிராணிகளிடம் இருந்து, மனிதர்களுக்கு பரவும் மேலும் பல வைரஸ்கள், மனிதர்களை தாக்கக் கூடும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தத்வமசி - சென்னை ,இந்தியா
08-ஜூலை-202014:29:39 IST Report Abuse
தத்வமசி கண்டதையும் தின்றால் எதுவும் நடக்கலாம். இந்தியாவிலும் அசைவம் சாப்பிடும் முறை ஒன்று இருக்கிறது. ஆனால் இன்று பல நாடுகளில் உள்ள முறை போல கிடையாது. எதையும் சாப்பிடலாம், எப்பவும் சாப்பிடலாம், எப்படியும் சாப்பிடலாம் என்று வந்து விட்டால் ஆபத்து அவர்களுக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் படுத்துகிறது. இது போக இந்த வியாதிகளை ஆராய்ச்சி செய்கிறேன் என்று சில நாடுகள் புதிய வியாதிகளை உருவாக்கும் வைரஸ்களை உருவாக்கி விடுகின்றன. அப்படிப்பட்டதில் ஒன்று தான் இந்த கொரோனா என்று அரசல் புரசலாக செய்திகள் வருகின்றன. ஆக மனித இனம் தன்னை தானே அழித்துக் கொள்ள பேராசையினால் முயற்சி செய்கிறது. டைனோசர் என்ற இனம் அழிந்தது போல மனித இனமும் ஒரு நாள் பேரழிவை சந்திக்கும். அன்று உயிருடன் யார் இருப்பார்கள் என்று தெரியாது. எந்த நாடு தப்பிக்கும் என்று தெரியாது.
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
08-ஜூலை-202014:21:21 IST Report Abuse
venkatan A new scientist group may be formed to culture all the viruses and spread all this viral borne diseases in China to complete it.No atomic bombs are necessary.One who sows which will definitely reap the same..is a nature law ion,because that country have enormous population in the globe and practices non ethics on biology.Destruction and disaster are going to happen spontaneously even to non-sinner of the world.
Rate this:
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
08-ஜூலை-202010:53:50 IST Report Abuse
Vivekanandan Mahalingam எல்லா வைரஸ்க்கும் ஆரம்பம் சீனா என்று சொல்லப்பட்டிருக்கிறது . இதற்கு மேலும் சீனாவிலிருந்து இறக்குமதி எதற்கு ? முக்கியமாக உணவு பொருள்களை இறக்கு மதி செய்ய கூடாது . மேலும் மருந்துகளின் மூல பொருள்கள் விலை மலிவு என்று ஏன் சீனா விலிருந்து வாங்க வேண்டும்? ஏன் வெரி நட்டுகளில் கிடைக்க வில்லையா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X