பொது செய்தி

தமிழ்நாடு

எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement

சென்னை: சென்னையில் மீண்டும் அதிகளவில் மழை பெய்யும். வெள்ளம் ஏற்பட்டு மெரீனா கடற்கரை காணாமல் போகும் என ஐ.ஐ.டி., ஆய்வில் தெரியவந்துள்ளது.



latest tamil news



2015 சென்னை பெருவெள்ளத்துக்கான பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்தும், எதிர்காலத்தில் அது ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் பற்றியும் சென்னை ஐ.ஐ.டி.,யை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்தியாவின் கடலோர நகரங்களில் பருவ நிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கம், அதில் மீளும் வழிமுறைகள் பற்றி ஆராய்வதற்கான இந்திய அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் சூப்பர் கம்ப்யூட்டர்களை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


latest tamil news



ஆய்வில், சென்னையில் 2015ல் பெய்த கன மழையை விட எதிர்காலத்தில் பலமடங்கு அதிகமாக மழைப்பொழிவு இருக்கும் என்பது தெரிய வந்தது. சென்னையில் பேரிழப்பு ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது சூப்பர் கம்ப்யூட்டர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 2035, 2055, 2075 உள்ளிட்ட 20 ஆண்டு இடை வெளியில் சென்னையில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.


latest tamil news



இதுபற்றி பேராசிரியர் பாலாஜி கூறுகையில், '2015 சென்னை பெருவெள்ளத்துடன் ஒப்பிடுகையில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக எதிர்காலத்தில் மழை பாதிப்பு இரண்டரை மடங்குக்கும் அதிகமாக இருக்கும். சென்னை, அதை சுற்றிலுள்ள பகுதிகளிலிருந்து வெளியேறும் மழைநீர் கடலில் கலக்க வழியின்றி பெரும் பிரச்சினை ஏற்படக்கூடும். மெரீனா உள்பட சென்னையின் தற்போதைய கடற்கரை பகுதிகளை நீண்ட நாட்கள் கடல்நீர் சூழ்ந்திடும்' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
15-ஜூலை-202006:11:19 IST Report Abuse
Ray அதனாலென்ன அசகாய சூரர்கள் (அசுரர்கள் அல்ல) இப்பவே பிளாட் போட்டு தேத்திடுவாங்க
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
09-ஜூலை-202008:20:12 IST Report Abuse
Sampath Kumar இப்பவே போய்கிட்டு தான் இருக்கு
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-ஜூலை-202005:12:23 IST Report Abuse
J.V. Iyer அதைப்பற்றி மக்களுக்கு என்ன கவலை? மெரீனா போனவுடன் இலவசங்கள் கிடைக்குமா? இதுதான் பெரிய கேள்விக்குறி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X