பதவியை ராஜினாமா செய்ய தயாரா?: புதுச்சேரி கவர்னருக்கு அமைச்சர் சவால்| Puducherry minister alleges irregularities in LG's office | Dinamalar

பதவியை ராஜினாமா செய்ய தயாரா?: புதுச்சேரி கவர்னருக்கு அமைச்சர் சவால்

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (19)
Share
Puducherry, Puducherry minister, Puducherry governor, kiran bedi, பதவியை ராஜினாமா செய்ய தயாரா?:  கவர்னருக்கு அமைச்சர் சவால்

புதுச்சேரி :'கிரண்பேடி தனது பதவியை ராஜினாமா செய்தால், அரசியலைவிட்டு விலகத் தயாராக உள்ளேன்' என, கவர்னருக்கு, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் சவால் விட்டுள்ளார்.அவர் நேற்று அளித்த பேட்டி:கவர்னரின் செயலர் பதவி கடந்த 2 ஆண்டுகளாக காலியாக உள்ளது. அரசில் அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று கூறும் கிரண்பேடி, அப்பதவியை நிரப்பாதது ஏன்.ராஜ்நிவாசில் பெண் அதிகாரி ஒருவர் உள்ளார்.


latest tamil news
வெளியில் உள்ள ஒரு புரோக்கரிடம் கூறினால், பெண் அதிகாரி 'டீல்' செய்து வேலையை முடித்து தருவார். நிறைய டீல் நடந்துள்ளது. 4 ஆண்டு களில் கோடிக்கு மேல் சென்றுள்ளது.எதற்கெடுத்தாலும் சி.பி.ஐ.,க்கு அனுப்புவேன் என்கிறார் கவர்னர். பெண் அதிகாரி, வெளியில் உள்ள புரோக்கர் மீது சி.பி.ஐ.,க்கு புகார் அனுப்பட்டும். கிரண்பேடி அலுவலகம் துாய்மையானதாக இல்லை. இது, அவருக்கு தெரிந்துதான் நடக் கிறது என நினைக்கிறேன்.கிரண்பேடி வந்த பின், ராஜ்நிவாசில் நிறைய செலவு செய்யப்பட்டுள்ளது. சமூக பொறுப்புணர்வு நிதியை நிறைய செலவிட்டுள்ளனர். அவர் மீதான ஆதாரங்களை திரட்டி வருகிறேன்.31 ஆண்டுகளாக அரசியலில் துாய்மையாக உள்ளேன். 2 ஆண்டுகளுக்கு மேல் ஒரு நாள்கூட புதுச்சேரியில் இருக்க மாட்டேன் என ஏற்கனவே கூறினார்.

அவர் பதவியை ராஜினாமா செய்யட்டும். நானும் பதவியை ராஜினாமா செய்து, அரசியலை விட்டு செல்கிறேன். தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். எனது சவாலை ஏற்கத் தயாரா?எனது துறையில் கிரண்பேடி தடுத்து நிறுத்திய திட்டங்கள் குறித்தும், ஏனாம் பிரச்னை குறித்தும் கோர்ட்டுக்கு செல்ல உள்ளேன்.
கொரோனா தொற்றை குறைப்பதற்கு நான் எடுத்த முடிவுகளை கிரண்பேடி தடுத்து நிறுத்துகிறார். கவர்னர் வந்த பிறகு ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தது மாதிரி தோற்றத்தை உருவாக்க முயற்சி நடக்கிறது.பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசிய அவர், புதுச்சேரிக்காக ஒரு ரூபாய் வாங்கி வந்திருப்பாரா. இந்த அரசு இருக்கக் கூடாது, மக்களுக்கு எதுவும் நடக்க கூடாது என நினைக்கிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X