அதிகாரிகளை கைக்குள் போட்டு தங்க வேட்டை; யார் இந்த ஸ்வப்னா?

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (78)
Share
Advertisement
திருவனந்தபுரம்: வெளிநாட்டு துாதரகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, கேரளாவுக்கு, 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலர் சிவசங்கர், அதிரடியாக பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தங்க கடத்தலில் தொடர்புடைய ஒருவர் சிக்கியுள்ள நிலையில், மாநில தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்த ஸ்வப்னாவை, சுங்கத்

திருவனந்தபுரம்: வெளிநாட்டு துாதரகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, கேரளாவுக்கு, 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலர் சிவசங்கர், அதிரடியாக பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தங்க கடத்தலில் தொடர்புடைய ஒருவர் சிக்கியுள்ள நிலையில், மாநில தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்த ஸ்வப்னாவை, சுங்கத் துறையினர் தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தால், முதல்வர் பினராயி விஜயனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.latest tamil news
யார் இந்த ஸ்வப்னா?


கேரளாவை பூர்வீகமாக உடைய ஸ்வப்னா, 34, ஐக்கிய அரபு எமிரேட்சில் பிறந்து வளர்ந்தவர். அபுதாபி விமான நிலையத்தில் பயணியர் சேவைப் பிரிவில் பணியாற்றிய அவர், 2013ல், கணவரிடம் விவாகரத்து பெற்று, கேரளாவுக்கு திரும்பினார்.

திருவனந்தபுரத்தில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவன அலுவலகத்தில் பணியாற்றினார். அப்போது, உடன் பணியாற்றிய அதிகாரி மீது, பொய்யான புகார் கொடுத்து, சர்ச்சையில் சிக்கினார். போலீஸ் விசாரணையில், பொய் புகார் கொடுத்ததை ஒப்புக் கொண்டார். பின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரக அலுவலகத்தில் நிர்வாக செயலராக பணியாற்றினார். அப்போது தான், தங்கம் கடத்துவதற்கான சதித் திட்டத்தை தீட்டி, அதை செயல்படுத்தி வந்துள்ளார்.


latest tamil newsதுாதரகத்திலும் சர்ச்சையில் சிக்கியதை அடுத்து, கேரள மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணிக்கு சேர்ந்தார். ஏற்கனவே வழக்கு நிலுவையில் இருந்ததை மறைத்தது தொடர்பாக, போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, மேல் மட்டத்திலிருந்து போலீசாருக்கு நெருக்கடி வந்ததாக கூறப்பட்டது. துாதரக அலுவலக பணியிலிருந்து வெளியேறிய போதும், அங்குள்ள அதிகாரிகளுடன், தொடர்பில் இருந்துள்ளார் ஸ்வப்னா.

போலி ஆவணங்களை தயாரித்து, துாதரகத்துக்கு உள்ள சிறப்பு அந்தஸ்தை தவறாக பயன்படுத்தி தங்கக் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். துாதரக அதிகாரிகளை சரிக்கட்டுவதற்காக, அவர்களுக்கு திருவனந்தபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில், அடிக்கடி, 'பார்ட்டி' கொடுத்துள்ளார். திருவனந்தபுரத்தில், பிரமாண்ட பங்களா ஒன்றையும், ஸ்வப்னா கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு, கோடிக்கணக்கில் இருக்கும் என, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.


latest tamil news


மாநில அரசில் உயர்ந்த பொறுப்பில் உள்ள சில அதிகாரிகள், ஸ்வப்னா வீட்டுக்கு அடிக்கடி வந்து, அவரை சந்தித்துச் செல்வதும் வழக்கம் என்றும் கூறப்படுகிறது. அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் கைக்குள் போட்டு, தங்க வேட்டை நடத்திய ஸ்வப்னாவை, இப்போது, சுங்கத் துறை அதிகாரிகளும், போலீசாரும் துரத்தத் துவங்கி உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
11-ஜூலை-202018:36:57 IST Report Abuse
S. Narayanan பெண்ணை நம்பாதே.
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
10-ஜூலை-202016:57:17 IST Report Abuse
dina ஸ்வப்னா ஸ்வப்னா சொக்கவைக்கும் ஸ்வப்னா பெண்களே எந்த வகை சொல்லு .....?
Rate this:
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
10-ஜூலை-202006:20:28 IST Report Abuse
B.s. Pillai Communist Party of India and its marxist branch only appear to be poor men party, but it received crores of rupees as donation from its Ally, DMK officially for election purpose to win one seat out of 246 seats in Tamil Nadu. Kerala counterpart also proved it is indirectly a pary of illegal activities. There was excessive advertisements by TamilNadu communist party workers and even media that Kerala controlled Covid in a very good manner, but now all htese people had vanished when the smuggling illegal activity is brought out in the light. Vijayan should resign his C.M. post.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X