அமெரிக்காவில் மூளை பாதிப்பு நோய்; கொரோனாவை தொடர்ந்து புதிய ஆபத்து

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
US, coronavirus, covid 19, brain damage, அமெரிக்கா, மூளை, அமீபா, நோய்

வாஷிங்டன்: 'கொரோனா' வைரஸ் பாதிப்பு மிகத் தீவிரமாக இருக்கும் அமெரிக்காவில் மூளையை தின்னும் அமீபா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மனிதர்கள் உடலில் பல அணுக்கள் உள்ளன. அதே நேரத்தில் அமீபா என்பது ஓரணு உயிரி. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நெக்லேரியா பவுலரி என்ற மனித மூளையை தின்னும் அமீபா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த மாகாண சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. மிதமான வெப்பநிலையில் உள்ள நல்ல நீரில் இந்த கிருமி இருக்கும்.


latest tamil newsபரிசோதனை


மூக்கின் மூலமாக உடலுக்குள் புகுந்து மூளையை சென்றடையும். இந்த அமீபா மூளையை கொஞ்சம் கொஞ்சமாக தின்னத் துவங்கும். ஆனால் இந்த உணர்வு மனிதர்களுக்கு தெரியாது. மிகவும் அபூர்வமான இந்த நோயால் சமீபத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் ஏரி குளம் நீச்சல் குளம் போன்றவற்றில் குளிக்கும்போது மூக்கின் வழியாக நீர் உள்ளே செல்வதை தவிர்க்கும்படி டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். தலைவலி காய்ச்சல் வாந்தி கழுத்து வலி ஆகியவையே இதன் அறிகுறிகளாகும்.


அபூர்வ நோய்


மேலும் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் நினைவு இழப்பது குழப்பங்கள் ஏற்படுவது வலிப்பு நோய் உடல் கட்டுப்பாட்டை இழப்பது ஆகியவையும் ஏற்படும். புளோரிடாவில் 1962ல் இருந்து இதுவரை 37 பேருக்கு இந்த அபூர்வ நோய் ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவில் 1962 - 2018 காலகட்டத்தில் 145 பேரை இந்த நோய் தாக்கியது. அதில் நான்கு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். தற்போது புளோரிடாவில் இது தென்பட்டுள்ளது. ஆனால் இந்த நோய் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
09-ஜூலை-202016:47:32 IST Report Abuse
madhavan rajan இது மூலையைத் தாக்கும் நோய் என்பதால் கீழ்க்கண்ட அறிவாளிகள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறார்.
Rate this:
Cancel
karthik -  ( Posted via: Dinamalar Android App )
08-ஜூலை-202012:44:49 IST Report Abuse
karthik தமிழ்நாட்டில் இது பரவாது.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
08-ஜூலை-202008:32:12 IST Report Abuse
தல புராணம் இப்ப தெரியுதா.. ஃபிளோரிடாவில் ஏன் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்குன்னு ? ம்முகக்கவசம் போடல்லை, கடற்கரைக்கு போயி கூட்டமா குஜால் பண்ண கெளம்பிட்டான்.. ஏன்? மூளையில் அமீபா, மூச்சிலே வைரஸ்..
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
09-ஜூலை-202005:30:31 IST Report Abuse
 Muruga Velவாரத்துக்கு ஒரு தடவை குளிக்கிறதே உங்க கூட்டத்துக்கு பெரிய விஷயம் .. தினம் குளிக்க ஆரம்பித்தாலும் உங்க கும்பலுக்கு ஒன்னும் ஆகாது ..மூளை இருக்கிறவங்கள மட்டும் தான் பாதிக்கும் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X