சீனாவை வாலாட்ட விட மாட்டோம் : அமெரிக்க அதிகாரி ஆவேச பேட்டி

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
Mark Meadows, us china, china, india, china india border dispute

வாஷிங்டன்: ''சீனாவுடனான பிரச்னையில் இந்தியாவுக்கு அமெரிக்க ராணுவம் எப்போதும் ஆதரவு அளிக்கும். சீனா மட்டுமல்ல; எந்த நாடும் மற்றொரு நாட்டை அடக்கி அதிகாரம் செய்ய அனுமதிக்க மாட்டோம்'' என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி மார்க் மெடோஸ் கூறியுள்ளார்.

நம் அண்டை நாடான சீனா எல்லை பகுதியில் நம்முடன் மோதல் போக்கை பின்பற்றி வருகிறது.தென் சீன கடல் பகுதியிலும் ஆதிக்கம் செலுத்தி பிலிப்பைன்ஸ் புரூனே தென் கொரியா ஜப்பான் ஆகிய நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.இதையடுத்து தென் சீன கடல் பகுதிக்கு அமெரிக்க விமானப் படையின் இரண்டு போர் விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கு இந்த விமானங்கள்போர் பயிற்சியில்ஈடுபட்டு வருகின்றன.

இது குறித்து அமெரிக்க அதிபரின் அதிகாரப் பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை யின் தலைமை அதிகாரி மார்க் மெடோஸ் கூறியதாவது:இந்திய வீரர்கள் 20 பேர் சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக சீனாவை மையமாக வைத்து செயல்படும் நிறுவனங்களின் 59 செயலிகளை இந்தியா தடை செய்துள்ளது; இதுசரியான நடவடிக்கை தான்.இந்தியா - சீனா இடையேயான பிரச்னையில் அமெரிக்க ராணுவம் எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும்.இந்தியா சீனா இடையேயான பிரச்னையில் மட்டுமல்ல; உலகின் எந்த பகுதியில் பிரச்னை நடந்தாலும்பலமான நட்புறவின் அடிப்படையில் அமெரிக்க ராணுவம் செயல்படும்.உலகில் உள்ள எந்த ஒரு நாடும் மற்றொரு நாட்டை அடக்கி அதிகாரம் செலுத்த நினைத்தால் அதைஅமெரிக்க ராணுவம்அனுமதிக்காது; இந்தவிஷயத்தில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.


latest tamil news



உலகின் சக்தி வாய்ந்த ராணுவம் அமெரிக்க ராணுவம் என்பதை உலகிற்கு காட்ட விரும்புகிறோம். அதனால் தான் தென் சீன கடல் பகுதிக்கு எங்கள் போர் விமானங்களை அனுப்பியுள்ளோம்.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ராணுவத்தை மேலும் பலப்படுத்த இந்த துறைக்காக அதிகம் செலவிட முடிவு செய்துள்ளார். சீனாவுக்கு எதிராக சில கடுமையான தடைகளை விதிக்கவும் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். தங்களுக்கு அருகேஉள்ள எல்லா நாடுகளையும் ஆக்கிரமிக்க சீனா திட்டமிட்டுள்ளது. எனவே அந்த நாடுகள் எல்லாம் அமெரிக்காவுடன் நட்புறவு வைத்துக் கொள்ள முடிவு செய்து உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


கொள்கையில் மாற்றம்!


சீனாவுடன் வர்த்தக உறவு வைத்துக் கொள் வதற்கான முயற்சிகளை அதிபர் டிரம்ப்மேற்கொண்டார். இதனால் அமெரிக்கபொருளாதாரத்துக்கு தான் பாதிப்பு ஏற்பட்டது. ஹாங்காங்கில் அடக்கு முறை சட்டத்தை சீனா அமல் படுத்தியுள்ளது. அங்குள்ள மக்களால் சுதந்திர காற்றை சுவாசிக்க முடியவில்லை. எனவே சீனா தொடர்பான அமெரிக்க கொள்கைகளில் மாற்றம் செய்வதற்கான நேரம் வந்து விட்டது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kuruvi - chennai,இந்தியா
08-ஜூலை-202019:07:47 IST Report Abuse
kuruvi சீனா திபெத்தை பிடிக்கும்போது உலகநாடுகள் எதிர்க்காமல் போனது துரதிஷ்டமானது .திபெத் எப்போதுமே சீனவாக இருந்ததில்லை .அவர்கள் சீன மொழி பேசுவதும் கிடையாது .சீனா ஆக்கிரமிப்புக்கு முந்தைய நானூறு ஆண்டுகளாக திபெத் ஒரு சுதந்திர நாடாக இருந்ததாகத்தான் வரலாறு கூறுகிறது .ஆக்கிரமிப்புக்குப்பின் திபெத் அரசு INEXILE. நடந்துகொண்டிருக்கிறது .தலாய்லாமாவும் அதற்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள் .ஒருவலுவான மிலிட்டரி உள்ள அரசாங்கம் இல்லாமல் போனதே ஆக்கிரமிப்புக்கு அடிமையாகிப்போனது .இதை ஏன் மறுபடியும் UNO. மூலம் உலகநாடுகள் மறுபரிசீலனை செய்யக்கூடாது ?சீனா நமக்கு எப்போதுமே நட்பானது இல்லை என்பது இருமுறை நிரூபித்தாகிவிட்டது . எதிரியை எதிரியாகவே நினைத்து நயவஞ்சகத்தில் விழாமல் இந்தியா மற்றநாடுகளோடிணைந்து பௌத்த மதத்தினரின் உரிமைகளை மீட்டிடமுயற்சிக்கவேண்டும் .
Rate this:
Cancel
Ramki_64 - Chennai,இந்தியா
08-ஜூலை-202018:31:36 IST Report Abuse
Ramki_64 இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து சீனா வை துவம்சம் பண்ண வேண்டியது தான் இனிமே
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஜூலை-202017:58:43 IST Report Abuse
Tamilan இது வாழ விடமாட்டோம் என்று சவால் விட வேண்டிய தருணம் . வாலாட்ட விடமாட்டோம் என்று மட்டுமே கூறுவது , இவர்களின் பெருந்தன்மைதான் காரணம் . இருப்பினும், சீனா உலகமெல்லாம் வாலாட்டுவதற்கு இவர்களும் ஒரு காரணம்தான் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X